தொழில்நுட்பம்
இணைய சேவை

இணைய சேவை முடக்கத்திற்கு இந்தியா கொடுத்த பெரும் தொகை

Published On 2020-01-10 11:41 GMT   |   Update On 2020-01-10 11:41 GMT
இந்தியா முழுக்க இணைய சேவை முடக்கங்களால் மத்திய அரசுக்கு ஏற்பட்ட பெரும் இழப்புகள் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.



காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து வன்முறை ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக இணையதள சேவைகள் முடக்கப்பட்டன.

அதுபோல வடகிழக்கு மாநிலங்களிலும் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்தபோது இணையதள சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

இணையதள சேவைகள் முடக்கப்பட்டதால் இந்தியாவில் மிகப்பெரிய அளவுக்கு பாதிப்புகள் ஏற்பட்டு இருப்பதை ஐரோப்பிய தொழில்நுட்ப ஆய்வு நிறுவனம் ஒன்று கண்டுபிடித்துள்ளது. உலகம் முழுவதும் எந்தெந்த நாடுகளில் இணையதள ரத்ததால் பாதிப்பு ஏற்படுகிறது என்பதை ஆய்வு செய்து வருகிறது.



அந்த வகையில் கடந்த ஆண்டு ஈராக், சூடான், இந்தியா ஆகிய மூன்று நாடுகளில்தான் இணையதள முடக்கத்தால் அதிக பொருளதார பாதிப்புகள் ஏற்பட்டு இருப்பதாக அந்த ஆய்வு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவில் காஷ்மீர், உத்தரபிரதேசம், அருணாசலபிரதேசம், ராஜஸ்தான், அசாம், மேகாலயா மாநிலங்களில் அதிக பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக ஆய்வில் தெரிகிறது.

அந்த வகையில் கடந்த ஆண்டு 4,196 மணி நேரத்திற்கு இந்தியா முழுவதும் இணையதள சேவைகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன. இது பொருளாதார வளர்ச்சியில் நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

பல்வேறு துறைகளிலும் ரூ.9,247 கோடிக்கு இந்தியாவுக்கு இழப்பு ஏற்பட்டு இருப்பதாக ஐரோப்பிய தொழில்நுட்ப ஆய்வு நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்திய மாநிலங்களில் உத்தரபிரதேசத்தில் அதிகபட்ச இழப்பு ஏற்பட்டு இருப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது. இந்த ஆண்டும் சில மாநிலங்களில் இணையதள முடக்கம் தொடர்வதால் பொருளாதார ரீதியிலான இழப்பு அதிகரித்தபடி உள்ளது.
Tags:    

Similar News