தொழில்நுட்பம்
ரியல்மி 5ஐ

நான்கு பிரைமரி கேமரா, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்ட ரியல்மி ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் அறிமுகம்

Published On 2020-01-09 09:04 GMT   |   Update On 2020-01-09 09:04 GMT
ரியல்மி பிராண்டின் புதிய ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் நான்கு பிரைமரி கேமரா, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.



ரியல்மி பிராண்டு இந்திய சந்தையில் ரியல்மி 5ஐ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. ரியல்மி 5 மற்றும் ரியல்மி 5எஸ் போன்று இல்லாமல் புதிய ஸ்மார்ட்போனில் கைரேகைகள் பதியாமல் கைகளில் இருந்து நழுவாத வகையில் நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது. 

சிறப்பம்சங்கள் ரியல்மி 5 ஸ்மார்ட்போனில் இருப்பதை போன்றே வழங்கப்பட்டுள்ளது. எனினும், புதிய ஸ்மார்ட்போனில் 8 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. ரியல்மி 5 மற்றும் ரியல்மி 5எஸ் ஸ்மார்ட்போனில் 13 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

புதிய ரியல்மி 5ஐ ஸ்மார்ட்போனில் 6.52 இன்ச் ஹெச்.டி. பிளஸ் மினி டிராப் நாட்ச் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் மற்றும் கலர் ஒ.எஸ். 6.1 வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 12 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8, 8 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்.பி. டெப்த் சென்சார், 2 எம்.பி. மேக்ரோ கேமரா வழங்கப்பட்டுள்ளது.



ரியல்மி 5ஐ சிறப்பம்சங்கள்:

- 6.52 இன்ச் 1600x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் மினி டிராப் டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பிளஸ்
- ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர்
- அட்ரினோ 610 GPU
- 4 ஜி.பி. ரேம்
- 64 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம் ஸ்லாட்
- கலர் ஒ.எஸ். 6.1 ரியல்மி எடிஷன் சார்ந்த ஆண்ட்ராய்டு 9.0 பை
- 12 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8, PDAF, எல்.இ.டி. ஃபிளாஷ், EIS
- 8 எம்.பி. 118° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 1.12μm பிக்சல், f/2.25
- 2 எம்.பி. டெப்த் சென்சார், 
- 2 எம்.பி. மேக்ரோ கேமரா, 1.75μm பிக்சல், f/2.4
- 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
- கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- மைக்ரோ யு.எஸ்.பி. 
- 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

ரியல்மி 5ஐ ஸ்மார்ட்போன் அக்வா புளூ மற்றும் ஃபாரஸ்ட் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 8,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மி அதிகாரப்பூர்வ வலைதளங்களில் ஜனவரி 15-ம் தேதி துவங்குகிறது.

Tags:    

Similar News