தொழில்நுட்பம்
ரியல்மி எக்ஸ்.டி.730ஜி

ரியல்மி எக்ஸ்.டி.730ஜி இந்திய வெளியீட்டு விவரம்

Published On 2019-12-06 08:10 GMT   |   Update On 2019-12-06 08:10 GMT
ரியல்மி பிராண்டின் புதிய எக்ஸ்.டி. 730ஜி ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



ரியல்மி பிராண்டின் புதிய எக்ஸ்.டி. 730ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் டிசம்பர் 20-ம் தேதிக்குள் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. 

முன்னதாக ரியல்மி எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போனின் அறிமுக நிகழ்வில் ரிய்லமி பிராண்டு தனது ரியல்மி எக்ஸ்.டி. 730ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் டிசம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்து இருந்தது. அதன்படி புதிய ஸ்மார்ட்போனின் வெளியீட்டு விவரம் இணையத்தில் கசிந்துள்ளது.

ஏற்கனவே ஸ்மார்ட்போனின் டீசரை வெளியிட்ட் ரியல்மி சரியான தேதியை மட்டும் அறிவிக்காமல் இருந்தது. இந்தியாவில் புதிய ரியல்மி எக்ஸ்.டி. 730  ஸ்மார்ட்போனின் விலை ரூ. 17,000 வரை நிர்ணம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போன் மட்டுமின்றி ரியல்மி பிராண்டு இயர்பட்ஸ் ஒன்றையும் அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. ரியல்மியின் புதிய இயர்பட்ஸ் ரியல்மி ஏர்பாட்ஸ் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படலாம்.   



இதுதவிர ரியல்மி எக்ஸ்.டி. 730ஜி ஸ்மார்ட்போன் அந்நிறுவனம் ஏற்கனவே சீனாவில் அறிமுகம் செய்த ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனின் ரீ-பிராண்டு செய்யப்பட்ட மாடல் ஆகும். 

ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர், 6 ஜி.பி., 8 ஜி.பி. ரேம், 64 ஜி.பி., 128 ஜி.பி. மெமரி வேரியண்ட்களில் கிடைக்கிறது. கலர் ஒ.எஸ். 6.0 சார்ந்த ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 அப்டேட் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகைப்படங்களை எடுக்க 64 எம்.பி. பிரைமரி கேமரா, 13 எம்.பி. வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்.பி. மேக்ரோ கேமரா, 2 எம்.பி. டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 32 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டிருக்கும் ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனில் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, VOOC ஃபிளாஷ் சார்ஜ் 4.0 வசதி வழங்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News