தொழில்நுட்பம்
நோக்கியா மொபைல் டீசர்

நோக்கியா 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம்

Published On 2019-12-04 07:56 GMT   |   Update On 2019-12-04 11:04 GMT
நோக்கியா நிறுவனம் ஸ்னாப்டிராகன் 765 பிராசஸர் கொண்ட 5ஜி ஸ்மார்ட்போனின் வெளியீட்டு விவரங்களை அறிவித்துள்ளது.



சியோமியை தொடர்ந்து நோக்கியா மொபைல் நிறுவனமும் ஸ்னாப்டிராகன் 765 பிராசஸர் கொண்ட 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. 

நோக்கியாவின் 5ஜி ஸ்மார்டபோன் பியூர்டிஸ்ப்ளே, செய்ஸ் ஆப்டிக்ஸ் மற்றும் 4K UHD அல்ட்ரா வைடு வீடியோ வசதி கொண்டிருக்கும் என தெரிகிறது. புதிய டீசரின் படி இந்த ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்படும் என்றும் புகைப்படங்களை எடுக்க மூன்று கேமரா சென்சார்கள் வழங்கப்படும் என தெரியவந்துள்ளது.



ஆப்டிமைஸ் செய்யப்பட்ட வடிவமைப்பு கொண்டிருக்கும் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் அதிக சூடாகாமல் பார்த்துக் கொள்ளும் வகையில் உருவாக்கப்படும். மேலும் 5ஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் போதும் நாள் முழுக்க பேட்டரி பேக்கப் வழங்கும் என கூறப்படுகிறது.

Tags:    

Similar News