தொழில்நுட்பம்
ட்விட்டர்

திடீரென அக்கவுண்ட்களை நீக்கும் ட்விட்டர்

Published On 2019-11-27 14:57 IST   |   Update On 2019-11-27 14:57:00 IST
ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் வாடிக்கையாளர்களில் சிலரது அக்கவுண்ட்களை டிசம்பர் மாதம் நீக்க இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.



ட்விட்டர் தளத்தில் ஆறு மாதங்களுக்கு மேல் பயன்படுத்தப்படாத அக்கவுண்ட்களை டிசம்பர் 11 ஆம் தேதி முதல் நிரந்தரமாக அழிக்க இருப்பதாக ட்விட்டர் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை மரணித்தவர்தகளின் அக்கவுண்ட்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

தளத்தில் நம்பகத்தன்மை வாய்ந்த தகவல்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக ட்விட்டர் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை மூலம் வாடிக்கையாளர்களை தொடர்ந்து ட்விட்டர் தளத்தை பயன்படுத்த வைக்க முடியும்.



கடந்த ஆறு மாதங்களுக்கும் அதிகமாக ட்விட்டரினை பயன்படுத்தாதவர்களது அக்கவுண்ட் நிரந்தரமாக நீக்கப்படுவது பற்றி ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் தகவல் வழங்கும் பணிகளை துவங்கி இருக்கிறோம். அந்த வகையில் ட்விட்டர் தளத்தை ஆறு மாதங்களாக பயன்படுத்தாதவர்களுக்கு எச்சரிக்கை தகவல் வழங்கப்படுகிறது.

வாடிக்கையாளர்களின் ட்விட்டர் கணக்கை நினைவில் கொள்ள தற்சமயம் எந்த வழிமுறையும் இல்லை. எனினும், இதனை சாத்தியப்படுத்தும் முயற்சிகளில் ட்விட்டர் குழு இயங்கி வருகிறது. 

Similar News