தொழில்நுட்பம்
ஐபோன் 11

ஐபோன் 11 சீரிஸ் போன்களுக்கு ஸ்மார்ட் பேட்டரி கேஸ் அறிமுகம்

Published On 2019-11-23 04:43 GMT   |   Update On 2019-11-23 04:43 GMT
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 11 சீரிஸ் போன்களுக்கு ஸ்மார்ட் பேட்டரி கேஸ் அறிமுகம் செய்யப்பட்டது.



ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோ மற்றும் ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் போன் மாடல்களுக்கு ஸ்மார்ட் பேட்டரி கேஸ்களை அறிமுகம் செய்துள்ளது. முந்தைய மாடல்களை போன்று புதிய பேட்டரி கேஸ் ஸ்மார்ட்போன்களுக்கு பாதுகாப்பாக இருப்பதோடு அவற்றின் பேட்டரி ஆயுளையும் நீட்டிக்கிறது.

ஸ்மார்ட் பேட்டரி கேஸ் வெளிப்புறம் மற்றும் உள்புறங்களில் மென்மையான மைக்ரோஃபைபர் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் இதன் எடை குறைவாக இருப்பதோடு அதிக உறுதியாகவும் இருக்கிறது. இது லைட்னிங் உதிரிபாகங்களான இயர்பாட்ஸ் போன்ற சாதனங்களுக்கும் சப்போர்ட் செய்கிறது.

ஐபோன் எக்ஸ்.எஸ். மற்றும் ஐபோன் எக்ஸ்.எஸ். மேக்ஸ் மாடல்களுக்கு வெளியான ஸ்மார்ட் பேட்டரி கேஸ்களை போன்று புதிய பேட்டரி கேஸ் பின்புறம் பேட்டரி பம்ப் கொண்டிருக்கிறது. மூன்றாம் தரப்பு பேட்டரி கேஸ் போன்று இல்லாமல், அதிகாரப்பூர்வ கேஸ் ஐ.ஒ.எஸ். இயங்குதளத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. 



இது போன் மற்றும் கேஸ் என இரண்டிலும் இருக்கும் பேட்டரி அளவுகளை காண்பிக்கிறது. இந்த கேஸ் யு.எஸ்.பி. பி.டி. ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் கியூ.ஐ. வயர்லெஸ் சார்ஜிங் கொண்டிருக்கிறது. மேலும் ஸ்மார்ட் பேட்டரி கேஸ் பிரத்யேக கேமரா ஷட்டர் பட்டன் வழங்கப்பட்டுள்ளது. 

இது போன் லாக் செய்யப்பட்ட நிலையிலும், கேமராவை இயக்கும். சிறிய க்ளிக் மூலம் போட்டோ எடுக்கவும், நீண்ட க்ளிக் செய்தால் வீடியோவை எடுக்க முடியும். புதிய ஸ்மார்ட் பேட்டரி கேஸ் ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோ மற்றும் ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் மாடல்களுக்கு 50 சதவிகிதம் கூடுதல் பேட்டரி பேக்கப் வழங்கும்.

ஆப்பிள் ஐபோன் 11 சீரிஸ்களுக்கான ஸ்மார்ட் பேட்டரி கேஸ் தேர்வு செய்யப்பட்ட சந்தைகளில் பல்வேறு நிறங்களில் விற்பனை செய்யப்படுகிறது. அமெரிக்காவில் இதன் விலை 129 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 9300 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்சமயம் இதன் இந்திய விலை மற்றும் விற்பனை பற்றி எவ்வித தகவலும் இல்லை.
Tags:    

Similar News