தொழில்நுட்பம்
சாம்சங் டபுள்யூ20 5ஜி டீசர்

இரட்டை ஸ்கிரீன் கொண்ட சாம்சங் ஃப்ளிப் போன்

Published On 2019-11-03 04:47 GMT   |   Update On 2019-11-03 04:47 GMT
இரட்டை ஸ்கிரீன் கொண்ட சாம்சங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

சாம்சங் நிறுவனத்தின் டபுள்யூ20 5ஜி ஸ்மார்ட்போன் நவம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த தகவலை சீனா டெலிகாம் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. சாம்சங் டபுள்யூ20 5ஜி இரட்டை ஸ்கிரீன் கொண்ட ஃப்ளிப் போன் ஆகும். 

இது கடந்த ஆண்டு சாம்சங் அறிமுகம் செய்த டபுள்யூ 2019 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடல் ஆகும். டபுள்யூ20 5ஜி மாடல் புதிய வடிவமைப்பு கொண்டிருக்கிறது. சாம்சங் நிறுவனத்தின் முந்தைய டபுள்யூ சீரிஸ் போன்களில் இரட்டை டிஸ்ப்ளே மற்றும் ஃப்ளிப் வசதி வழங்கப்பட்டு இருந்தது. 



ஸ்மார்ட்போனின் வெளிப்புறம் மற்றும் உள்புறங்களில் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கும். இது ஃப்ளிப் வடிவமைப்பில் உருவான மடிக்கக்கூடிய போன் ஆகும். முன்னதாக இதேபோன்ற வடிவமைப்பு கொண்ட மொபைல் போனினை சாம்சங் கடந்த வாரம் நடைபெற்ற சாம்சங் டெவலப்பர் நிகழ்வில் அறிமுகம் செய்தது. 

புதிய மாடல் புளூம் என்ற குறியீட்டு பெயரில் SM-F700F எனும் மாடல் நம்பரில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இதில் 6.7 இன்ச் மடிக்கக்கூடிய டிஸ்ப்ளேவும், 1 இன்ச் கவர் டிஸ்ப்ளே வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மோட்டோரோலா நிறுவனமும் புதிய ரேசர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை நவம்பர் 13 ஆம் தேதி அறிமுகம் செய்வதாக அறிவித்து இருக்கிறது.
Tags:    

Similar News