தொழில்நுட்பம்
சீனாவில் 5ஜி

5ஜி சேவையை துவக்கிய சீனா

Published On 2019-11-02 08:01 GMT   |   Update On 2019-11-02 08:01 GMT
டெலிகாம் துறையில் அதிநவீன தொழில்நுட்பமான 5ஜி சேவை சீனாவில் துவங்கப்பட்டது. இதுபற்றிய விவரங்களை பார்ப்போம்.



இணைய தொழில்நுட்பத்தில் தற்போது பல நாடுகளில் 4ஜி சேவை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கு அடுத்தபடியாக உள்ள 5ஜி சேவையை அளிக்க சீனா, அமெரிக்கா மற்றும் தென் கொரியா உள்ளிட்ட நாடுகள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. 5ஜி சேவையில் இணைய வேகம் 4ஜி சேவையை விட 20 முதல் 100 மடங்கு வரை அதிக வேகமாக இருக்கும் என கூறப்படுகிறது.  

கடந்த ஏப்ரல் மாதம் தென் கொரிய மொபைல் நிறுவனமான சாம்சங் புதிய 5ஜி ஸ்மார்ட்போனை வெளியிட்டது. அமெரிக்கா தனது 5ஜி மொபைல் சேவையை அடுத்த சில வாரங்களில் வெளியிட்டது. இந்தநிலையில் 5ஜி தொழில்நுட்பம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 



சீனா மொபைல்ஸ், சீனா டெலிகாம் மற்றும் சீனா யுனிகாம் ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 5ஜி சேவை பற்றிய அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளன. முதற்கட்டமாக பீஜிங், ஷாங்காய் போன்ற முதல் தர நகரங்கள், வூகான், நஞ்சிங் போன்ற இரண்டாம் தர நகரங்கள் என மொத்தம் 50 நகரங்களில் மட்டும் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது.

5ஜி சேவையை இந்தியாவில் தொடங்க அமெரிக்காவும், சீனாவும் போட்டி போட்டு வந்த நிலையில், முதல்கட்டமாக சீனா அதனை தங்கள் நாட்டிலேயே அறிமுகம் செய்துள்ளது.

5ஜி சேவை பெற குறைந்தபட்ச மாதாந்திரக் கட்டணமாக இந்திய மதிப்பில் சுமார் ரூ.1272 என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சக் கட்டணமான ரூ.6000 செலுத்துவோருக்கு ஒரு நொடிக்கு ஒரு ஜி.பி என்ற வேகத்தில் 300 ஜி.பி. டேட்டாவைப் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News