தொழில்நுட்பம்
மோட்டோ ரேசர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் புகைப்படம்

இணையத்தில் லீக் ஆன மோட்டோ ரேசர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் புகைப்படம்

Published On 2019-11-01 06:14 GMT   |   Update On 2019-11-01 06:14 GMT
மோட்டோரோலா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ரேசர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.



மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய சாதனங்கள் நவம்பர் 13 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில், மோட்டோ ரேசர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

ட்விட்டர் தளத்தில் வெளியிடப்பட்டு இருக்கும் புகைப்படங்களில் மோட்டோ ரேசர் ஸ்மார்ட்போன் பார்க்க 2004 ஆம் ஆண்டு வெளியான மோட்டோ ரேசர் வி3 போன்று காட்சியளிக்கிறது. புகைப்படங்களின் படி புதிய ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளேக்கள் ஒரே இடத்தில் ஃப்ளிப் ஆகும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இத்துடன் ஸ்மார்ட்போனின் முன்புறம் பட்டன் ஒன்று காணப்படுகிறது. இதிலேயே கைரேகை சென்சாரும் பொருத்தப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் ஸ்மார்ட்போனின் பின்புறம் கேமரா சென்சார் காணப்படுகிறது. 



ஸ்மார்ட்போன் புகைப்படங்களைத் தொடர்ந்து ரேசர் லோகோ படமும் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே வெளியான தகவல்களில் மோட்டோ ரேசர் ஸ்மார்ட்போனின் மேல்புறம் டிஸ்ப்ளே வழங்கப்படும் என்றும் கீழ்புறத்தை திறக்கும் போது பெரிய திரை மற்றும் ஹின்ஜ் உள்ளிட்டவை தெரியும் என கூறப்பட்டது.

புதிய புகைப்படங்களில் ஸ்மார்ட்போனின் மற்ற விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. எனினும், வரும் நாட்களில் இதுபற்றிய விவரங்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News