தொழில்நுட்பம்
ஐபோன் எஸ்.இ. - கோப்புப்படம்

ஐபோன் எஸ்.இ. 2 வெளியீட்டு விவரம்

Published On 2019-10-31 06:28 GMT   |   Update On 2019-10-31 06:29 GMT
ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஐபோன் எஸ்.இ. 2 மாடலின் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எஸ்.இ. 2 ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு (2020) மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல ஆப்பிள் வல்லுநர் வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி ஐபோன் எஸ்.இ. 2 மாடலுக்கான உற்பத்தி பணிகள் ஜனவரி 2020 வாக்கில் துவங்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதுவரை கிடைத்து இருக்கும் தகவல்களில் இரண்டாம் தலைமுறை ஐபோன் எஸ்.இ. மாடல் பார்க்க ஐபோன் 8 போன்று காட்சியளிக்கும் என கூறப்படுகிறது.

முந்தையை ஐபோன் எஸ்.இ. வடிவமைப்பு ஐபோன் 5 மாடலை தழுவி உருவாக்கப்பட்டது. புதிய ஐபோன் எஸ்.இ. மாடல் ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6எஸ் பயனர்களுக்கு அப்கிரேடு ஆப்ஷனாக இருக்கும்.



இத்துடன் ஐபோன் எஸ்.இ. 2 மாடலில் புதிய ஏ13 சிப்செட் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதே சிப்செட் தற்போதைய ஐபோன் 11 சீரிஸ் மாடல்களிலும் வழங்கப்பட்டு உள்ளது. புதிய ஐபோன் எஸ்.இ. 2 மாடலில் 3 ஜி.பி. ரேம் மற்றும் ஃபேஸ் ஐடி அம்சத்திற்கு மாற்றாக டச் ஐடி கைரேகை சென்சார் வழங்கப்படலாம்.

சமீபத்தில் வெளியான தகவல்களில் ஐபோன் எஸ்.இ. 2 மாடலில் லிக்விட் க்ரிஸ்டல் பாலிமர் ஆன்டெனா வடிவமைப்பு கொண்டிருக்கும் என்றும் கூறப்பட்டது. இந்த வடிவமைப்பு வயர்லெஸ் தகவல் பரிமாற்றத்தை மேம்படுத்தும்.

ஐபோன் எஸ்.இ. 2 மாடல் சில்வர், ஸ்பேஸ் கிரே மற்றும் ரெட் போன்ற நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. இதன் விலை 399 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 28,300) முதல் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News