தொழில்நுட்பம்
ஏர்பாட்ஸ்

நான்கு வித நிறங்களில் உருவாகும் ஏர்பாட்ஸ் ப்ரோ

Published On 2019-10-28 12:28 IST   |   Update On 2019-10-28 12:28:00 IST
ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பாட்ஸ் ப்ரோ இயர்போன் பற்றிய புதிய விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.



ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 7 மாடலில் முதன்முறையாக ஹெட்போன் ஜாக் அம்சத்தை நீக்கி ஆப்பிள் ஏர்பாட்ஸ் எனும் வயர்லெஸ் இயர்போனினை அறிமுகம் செய்தது.

சமீபத்தில் இதனை அப்டேட் செய்து வயர்லெஸ் சார்ஜிங் வசதியை வழங்கியது. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் தனது ஏர்பாட்ஸ் மாடலின் ப்ரோ வெர்ஷனை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஏர்பாட்ஸ் ப்ரோ மாடல் ஐபோன் 11 ப்ரோவுடன் வழங்கப்படும் என தெரிகிறது.

ஆப்பிள் ஐபோன் 11 ப்ரோ மற்றும் ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் மாடல்கள் நான்கு புதிய நிறங்களில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி ஏர்பாட்ஸ் ப்ரோ: வைட், கோல்டு, மிட்நைட் பிளாக் மற்றும் மிட்நைட் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. புதிய நிறங்கள் தவிர இயர்போனில் எவ்வித மாற்றமும் செய்யப்படாது என கூறப்படுகிறது.



ஏர்பாட்ஸ் ப்ரோ மாடலில் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட்  வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இயர்போன்கள் சமீபத்தில் ஐ.ஒ.எஸ். 13.2 தளத்திற்கான சோர்ஸ் கோட்களில் காணப்பட்டது. இந்த இயர்போன் கிறுஸ்துமஸ் பண்டிகை காலத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

ஏர்பாட்ஸ் போன்றே ஏர்பாட்ஸ் ப்ரோ மாடலின் விலையும் அதிகமாக நிர்ணயிக்கப்படலாம் என கூறப்படுகிறது. ஏர்பாட்ஸ் ப்ரோ மாடலின் விலை 200 முதல் 300 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 14,167 முதல் ரூ. 21,250) வரை நிர்ணயிக்கப்படலாம்.

புகைப்படம் நன்றி: EverythingApplePro

Similar News