தொழில்நுட்பம்
டி.சி.எல். மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்

இருபுறங்களில் மடியும் புதிய ஸ்மார்ட்போன்

Published On 2019-10-26 06:03 GMT   |   Update On 2019-10-26 06:03 GMT
டி.சி.எல். நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ப்ரோடோடைப் விவரங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.



ஸ்மார்ட்போன் சந்தையில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சாதனங்கள் இன்றும் சோதனை கட்டத்திலேயே இருக்கின்றன. சந்தையில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள நிலையில், டி.சி.எல். தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் கான்செப்ட்டை அறிமுகம் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் வடிவமைப்பில் இரண்டு இடங்களில் மடிக்கக்கூடிய வகையில் உருவாகி இருக்கிறது. ஸ்மார்ட்போன் முழுமையாக திறக்கப்பட்டால் பெரிய திரை காணப்படுகிறது. முதற்கட்டமாக ஸ்மார்ட்போனின் கான்செப்ட் காட்சிப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

ஸ்மார்ட்போன்களை மடிக்க செய்யும் கீழ்களுக்கு இரு பெயர்கள் வழங்கப்பட்டுள்ளன. ஸ்மார்ட்போனின் முதல் கீழ் டிராகன் ஹின்ஜ் என்றும் மற்றொன்று பட்டர்ஃபிளை ஹின்ஜ் என அழைக்கப்படுகின்றன. இரு கீழ்களும் ஒன்றிணைந்து ஸ்மார்ட்போனை திறக்க செய்கிறது.



ஸ்மார்ட்போன் மடிக்கப்பட்ட நிலையில் பட்டர்ஃபிளை ஹின்ஜ் வெளிப்புறம் ஸ்கிரீனாக செயல்படுகிறது. வழக்கமான மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை விட இதன் திரையை அதிக தரமுள்ளதாக மாற்றும் பணிகளில் டி.சி.எல். ஈடுபட்டுள்ளது. ப்ரோடோடைப் உருவாக்கும் பணிகளுக்கு முன்பே டி.சி.எல். நிறுவனம் தனது டிராகன் ஹின்ஜ் பற்றிய அறிவிப்பை வெளியிட்டது.

டி.சி.எல். தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனிற்கு இதுவரை பெயரிடவே இல்லை. மேலும் இதன் வெளியீடு மற்றும் விலை பற்றியும் டி.சி.எல். இதுவரை எவ்வித தகவலும் வழங்கவில்லை. இந்த ஸ்மார்ட்போனில் நான்கு கேமரா செட்டப் மற்றும் யு.எஸ்.பி. டைப்-சி போர்ட் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

Tags:    

Similar News