தொழில்நுட்பம்
ஒன்பிளஸ் 8 ப்ரோ ரென்டர்

நான்கு பிரைமரி கேமரா, பன்ச் ஹோல் டிஸ்ப்ளேவுடன் உருவாகும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்

Published On 2019-10-19 04:35 GMT   |   Update On 2019-10-19 04:35 GMT
ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஒன்பிளஸ் 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.



ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 7டி மற்றும் ஒன்பிளஸ் 7டி ப்ரோ ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் வெளியாகி சில வாரங்களே ஆகியிருக்கிறது. இந்நிலையில், ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாக துவங்கி இருக்கின்றன.

அதன்படி புதிய ஒன்பிளஸ் 8 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.65 இன்ச் குவாட் ஹெச்.டி. பிளஸ் 90 ஹெர்ட்ஸ் பன்ச் ஹோல் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. அந்த வகையில் இது ஒன்பிளஸ் 7டி ப்ரோ ஸ்மார்ட்போனை விட சற்றே சிறிய டிஸ்ப்ளே கொண்டிருக்கும்.



புகைப்படங்களை எடுக்க நான்கு பிரைமரி கேமரா செட்டப் வழங்கப்படலாம். இவற்றில் மூன்று கேமராக்கள் செங்குத்தாகவும் இதன் அருகில் 3டி ToF சென்சார், லேசர் ஆட்டோஃபோகஸ் சென்சார் காணப்படுகிறது. இதன் பவர் பட்டன் மற்றும் அலெர்ட் ஸ்லைடர் ஸ்மார்ட்போனின் வலது புறத்தில் வழங்கப்படுகிறது.

வால்யூம் பட்டன்கள் இடதுபுறத்திலும், யு.எஸ்.பி. டைப்-சி போர்ட், மேம்பட்ட ஸ்பீக்கர் கிரில் ஸ்மார்ட்போனின் கீழ்பகுதியில் வழங்கப்படுகிறது. புதிய ஒன்பிளஸ் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாக இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில், ஒன்பிளஸ் 8 ப்ரோ தகவல்களில் மாற்றங்கள் இருக்கலாம் என்றே தெரிகிறது.

புகைப்படம் நன்றி: @OnLeaks 
Tags:    

Similar News