தொழில்நுட்பம்
கேலக்ஸி நோட் 10

விரைவில் இந்தியா வரும் கேலக்ஸி நோட் 10 லைட்

Published On 2019-10-13 05:01 GMT   |   Update On 2019-10-13 05:01 GMT
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ்10இ ஸ்மார்ட்போனை தொடர்ந்து சாம்சங் நிறுவனம் தற்சமயம் குறைந்த விலையில் கேலக்ஸி நோட் சீரிஸ் ஸ்மார்ட்போனினை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது.

புதிய விலை குறைந்த கேலக்ஸி நோட் ஸ்மார்ட்போன் கேலக்ஸி நோட் 10இ பெயரில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி நோட் 10 மற்றும் கேலக்ஸி நோட் 10 பிளஸ் மாடல்களை விட விலை குறைவாக நிர்ணயிக்கப்படும் என தெரிகிறது.

தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய கேலக்ஸி நோட் ஸ்மார்ட்போன் SM-N770F என்ற பெயரில் உருவாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இந்த ஸ்மார்ட்போன் ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்டு அதன் பின் மற்ற நாடுகளில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.



விலை குறைந்த ஸ்மார்ட்போன் என்பதால் இதன் ஹார்டுவேர் அம்சங்களில் மாற்றம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கலாம். அந்த வகையில் புதிய ஸ்மார்ட்போனில் டூயல் கேமராவும் கேலக்ஸி நோட் 10 மற்றும் நோட் 10 பிளஸ் மாடலில் உள்ளதை விட சிறிய பேட்டரி, குறைந்த மெமரி மற்றும் ரேம் வழங்கப்படும் என தெரிகிறது.

நோட் சீரிஸ் என்பதால் இந்த ஸ்மார்ட்போனுடன் எஸ் பென் வழங்கப்படலாம். எனினும், இதில் கைரோஸ்கோப், அக்செல்லோமீட்டர் உள்ளிட்டவை வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இதில் ப்ளூடூத் பில்ட்-இன் வசதி வழங்கப்படலாம். இதன் விலை பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

தற்சமயம் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 69,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. கேலக்ஸி நோட் 10 பிளஸ் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மற்றும் 512 ஜி.பி. என இரு மாடல்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறேயே ரூ. 79,999 மற்றும் ரூ. 89,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News