தொழில்நுட்பம்
நோக்கியா 6.2

மூன்று பிரைமரி கேமராவுடன் பட்ஜெட் விலையில் அறிமுகமான நோக்கியா ஸ்மார்ட்போன்

Published On 2019-10-11 11:37 GMT   |   Update On 2019-10-11 11:37 GMT
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நோக்கியா 6.2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.



ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 6.2 ஸ்மார்ட்போனினை மிட்-ரேன்ஜ் பிரிவில் இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் FHD+ வாட்டர் டிராப் பியூர் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 636 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.

நோக்கியா 6.2 ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 அப்டேட் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 16 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 5 எம்.பி. டெப்த் சென்சார் மற்றும் 8 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.



நோக்கியா 6.2 சிறப்பம்சங்கள்:

- 6.39 இன்ச் 1080x2340 பிக்சல் FHD+ 19.5:9 HDR 10 பியூர் டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
- 1.8GHz ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 636 பிராசஸர்
- அட்ரினோ 509 GPU
- 4 ஜி.பி. LPPDDR4x ரேம்
- 64 ஜி.பி. (eMMC 5.1) மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம் ஸ்லாட்
- ஆண்ட்ராய்சடு 9.0 பை
- 16 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8
- 8 எம்.பி. 118° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.2
- 5 எம்.பி. டெப்த் சென்சார்
- 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, ZEISS ஆப்டிக்ஸ்
- கைரேகை சென்சார்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- யு.எஸ்.பி. டைப்-சி 2.0
- 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி

இந்தியாவில் புதிய நோக்கியா 6.2 ஸ்மார்ட்போன் செராமிக் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 15,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News