தொழில்நுட்பம்
கேலக்ஸி ஏ20எஸ்

மூன்று பிரைமரி கேமரா, 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகம்

Published On 2019-10-08 04:45 GMT   |   Update On 2019-10-08 04:45 GMT
சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி ஏ20எஸ் ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் மூன்று பிரைமரி கேமரா, 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.



சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ20எஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இது சாம்சங் ஏற்கனவே அறிமுகம் செய்த கேலக்ஸி ஏ20 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் ஆகும். 

புதிய கேலக்ஸி ஏ20எஸ் ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி வி டி.எஃப்.டி. ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 450 பிராசஸர், அதிகபட்சம் 4 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு பை இயங்குதளம், 13 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8, 8 எம்.பி. 120° அல்ட்ரா வைடு மற்றும் 5 எம்.பி. டெப்த் சென்சார், 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0 வழங்கப்பட்டுள்ளது.

3டி பிளாஸ்டிக் பேக் மற்றும் கிரேடியன்ட் ஃபினிஷ் செய்யப்பட்டிருக்கும் கேலக்ஸி ஏ20எஸ் ஸ்மார்ட்போனில் பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட், பின்புறம் கைரேகை சென்சார், 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கிறது.



சாம்சங் கேலக்ஸி ஏ20எஸ் சிறப்பம்சங்கள்:

- 6.4 இன்ச் 1560x720 பிக்சல் HD+ TFT இன்ஃபினிட்டி-வி டிஸ்ப்ளே
- 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 450 14 என்.எம். பிராசஸர்
- அட்ரினோ 506 GPU
- 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி
- 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி 
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் சாம்சங் ஒன் யு.ஐ.
- டூயல் சிம் ஸ்லாட்
- 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8
- 8 எம்.பி. 120° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.2
- 5 எம்.பி. டெப்த் சென்சார்
- 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
- கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- யு.எஸ்.பி. டைப்-சி
- 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் 

சாம்சங் கேலக்ஸி ஏ20எஸ் ஸ்மார்ட்போன் பிளாக், புளு மற்றும் கிரீன் என மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் 3 ஜி.பி. + 32 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 11,999 என்றும் 4 ஜி.பி. + 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 13,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News