தொழில்நுட்பம்
நோக்கியா லோகோ

ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட நோக்கியா ஃபீச்சர் போன்

Published On 2019-09-21 06:33 GMT   |   Update On 2019-09-21 06:33 GMT
ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட நோக்கியாவின் புதிய ஃபீச்சர் போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.



ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் கொண்ட நோக்கியா ஃபீச்சர் போன் வீடியோ ஆன்லைனில் வெளியாகியுள்ளது. புதிய மொபைல் போன் கீபேட் கொண்டிருக்கிறது. புதிய வீடியோவின் படி கூகுள் தனது ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை ஃபீச்சர் போனிற்கு ஏற்ப அப்டேட் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. 

ஏற்கனவே பலமுறை ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட ஃபீச்சர் போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இதுதவிர கூகுள் க்ரோம் சேவையின் டச்-லெஸ் பதிப்பு ஸ்கிரீன்ஷாட்களும் லீக் ஆகியிருந்தன.

ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட நோக்கியா ஃபீச்சர் போன் வீடியோ விமியோ தளத்தில் வெளியாகியிருக்கிறது. ஒருநிமிடம் ஓடும் வீடியோவில் ஆண்ட்ராய்டு டச்-லெஸ் பதிப்பின் யு.ஐ. விவரங்கள் வெளியாகியுள்ளது. இத்துடன் பிரபல ஸ்னேக் கேமின் டச்-லெஸ் பதிப்பும் இடம்பெற்றிருக்கிறது.



வீடியோவில் ஹோம் ஸ்கிரீன், ஹோம் ஸ்கிரீன் விட்ஜெட்கள், ஆப் டிராயர், பல்வேறு செயலிகள் மற்றும் செட்டிங் ஆப் போன்றவை காணப்படுகிறது. இதே வீடியோவில் பயனர் கூகுள் மேப்ஸ் செயலியை திறக்க முயலும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. எனனும், மேப்ஸ் செயலி சீராக இயங்கவில்லை.

இத்துடன் க்ரோம், யூடியூப், கேமரா, கால் லாக், கால்குலேட்டர் மற்றும் காலண்டர் போன்ற முதன்மை செயலிகள் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கின்றன. இவற்றுடன் கேலரி, கிளாக், மியூசிக், போன், கான்டாக்ட்ஸ், ஷேர் ஃபைல்ஸ், சவுண்ட், போன் டிப்ஸ் மற்றும் செட்டிங் போன்றவையும் வழங்கப்படுகின்றன.
Tags:    

Similar News