தொழில்நுட்பம்
ஐபோன் 11

ரூ. 7,000 வரை உடனடி தள்ளுபடி - இந்தியாவில் ஐபோன் 11 சீரிஸ், ஆப்பிள் வாட்ச் 5 முன்பதிவு துவங்கியது

Published On 2019-09-20 04:53 GMT   |   Update On 2019-09-20 04:53 GMT
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 11 சீரிஸ், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5 மாடல்களுக்கான முன்பதிவு துவங்கியது. முன்பதிவு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோ, ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5 மாடல்களுக்கான முன்பதிவுகளை துவங்கியுள்ளது. இந்திய வாடிக்கையாளர்கள் முன்பதிவினை ப்ளிப்கார்ட், அமேசான் மற்றும் பேடிஎம் மால் தளங்களில் மேற்கொள்ளலாம்.

புதிய ஆப்பிள் சாதனங்களை முன்பதிவு செய்வோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு மாத தவணை முறை சேவையை பயன்படுத்தும் போது ரூ. 6,000 வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோ ஸ்மார்ட்போன்களுக்கு ரூ. 7,000 வரை உடனடி தள்ளுபடியும், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5 வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 4,000 வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ஐபோன் 11 ஸ்மார்ட்போனினை ப்ளிப்கார்ட், அமேசான் மற்றும் பேடிஎம் மால் தளங்களில் முன்பதிவு செய்யலாம். இதன் துவக்க விலை 64 ஜி.பி. மாடலுக்கு ரூ. 64,900 என்றும் 128 மற்றும் 256 ஜி.பி. மாடல்கள் முறையே ரூ. 69,900 மற்றும் ரூ. 79,900 விலையில் துவங்குகிறது.



ஐபோன் 11 ப்ரோ மாடலையும் ப்ளிப்கார்ட், அமேசான் மற்றும் பேடிஎம் மால் தளங்களில் முன்பதிவு செய்யலாம். இதன் துவக்க விலை ரூ. 99,900 என துவங்குகிறது. இதன் 256 மற்றும் 512 ஜி.பி. மாடல்கள் முறையே ரூ. 1,13,900 மற்றும் ரூ. 1,31,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனினை ப்ளிப்கார்ட், அமேசான் மற்றும் பேடிஎம் மால் தளங்களில் முன்பதிவு செய்யலாம். இதன் துவக்க விலை ரூ. 1,09,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் 256 மற்றும் 512 ஜி.பி. மாடல்கள் முறையே ரூ. 1,23,900 மற்றும் ரூ. 1,41,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5 மாடலை ப்ளிப்கார்ட், அமேசான் மற்றும் பேடிஎம் மால் தளங்களில் முன்பதிவு செய்யலாம். இதன் துவக்க மாடலான 40எம்.எம். ஜி.பி.எஸ். விலை ரூ. 40,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் 44எம்.எம். ஜி.பி.எஸ். விலை ரூ. 43,900, 40எம்.எம். ஜி.பி.எஸ். + செல்லுலார் ரூ. 49,900, 44எம்.எம். ஜி.பி.எஸ்.+ செல்லுலார் ரூ. 52,990, 40எம்.எம். ஜி.பி.எஸ்.+ செல்லுலார் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ரூ. 65,900, 40எம்.எம். ஜி.பி.எஸ்.+ செல்லுலார் மிலானிஸ் லூப் ரூ. 69,900, 44எம்.எம். ஜி.பி.எஸ்.+ செல்லுலார் மிலானிஸ் லூப் விலை ரூ. 73,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் இவற்றின் விற்பனை செப்டம்பர் 27 ஆம் தேதி துவங்குகிறது.

Tags:    

Similar News