தொழில்நுட்பம்
வாட்ஸ்அப்

வாட்ஸ்அப் செயலியில் மியூட் செய்யப்பட்ட ஸ்டேட்டஸ்களை மறைக்கும் புதிய வசதி

Published On 2019-09-19 11:07 GMT   |   Update On 2019-09-19 11:07 GMT
வாட்ஸ்அப் செயலியில் மியூட் செய்யப்பட்ட ஸ்டேட்டஸ்களை மறைக்கச் செய்யும் புதிய வசதி சோதனை செய்யப்படுகிறது.



வாட்ஸ்அப் செயலியில் மியூட் செய்யப்பட்ட ஸ்டேட்டஸ்களை மறைக்கச் செய்யும் வசதி வழங்கப்பட இருக்கிறது. முதற்கட்டமாக இந்த அம்சம் ஆண்ட்ராய்டு தளத்தில் மட்டும் வழங்கப்படுகிறது.  

தற்சமயம் வாட்ஸ்அப் செயலியில் காண்டாக்ட்களின் ஸ்டேட்டஸ் மியூட் செய்யும் போது, அவை சற்றே மறைக்கப்பட்ட நிலையில், கீழ்புறமாக தெரியும். புதிய 2.19.260 பீட்டா பதிப்பில் மியூட் செய்யப்பட்டவற்றை முழுமையாக மறைக்கச் செய்யும் வசதி வழங்கப்படுகிறது. 

புதிய அம்சம் ஹைடு மியூட்டெட் ஸ்டேட்டஸ் அப்டேட்ஸ் என்ற பெயரில் வழங்கப்படுகிறது. வாட்ஸ்அப் பீட்டா 2.19.260 பதிப்பை பயன்படுத்துவோர் புதிய அம்சத்தை பயன்படுத்த முடியும். ஒருவேளை செயலியை அப்டேட் செய்த பின்பும், இந்த அம்சம் கிடைக்காத பட்சத்தில் வாட்ஸ்அப் செயலியை ரீ-இன்ஸ்டால் செய்து பார்க்கவும்.



இதுதவிர வாட்ஸ்அப் செயலியில் பேமன்ட் வசதி வழங்குவதற்கான பணிகள் நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. இந்த அம்சம் விரைவில் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. மெக்சிகோவிலும் இதே அம்சம் சோதனை செய்யப்படுகிறது. ஆண்ட்ராய்டு பீட்டா 2.19.222 பதிப்பில் வாட்ஸ்அப் ஃபிரம் ஃபேஸ்புக் எனும் டேக்லைன் சேர்க்கப்பட்டது.

இத்துடன் செயலியில் கைரேகை மூலம் லாக் செய்யும் வசதியும் வழங்கப்பட்டது. இந்த அம்சம் செயலியை மற்றவர்கள் எளிதில் பயன்படுத்த விடாமல் செய்யும். இது கைரேகை பதிவிட்டால் மட்டுமே செயலியை பயன்படுத்த வழி செய்யும். 

புகைப்படம் நன்றி: Saigopi/Twitter
Tags:    

Similar News