தொழில்நுட்பம்
ரியல்மி எக்ஸ்2

விரைவில் அறிமுகமாகும் ரியல்மி ஸ்மார்ட்போன்

Published On 2019-09-17 11:11 GMT   |   Update On 2019-09-17 11:13 GMT
ரியல்மி பிராண்டின் புதிய ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



ரியல்மி பிராண்டு தனது ரியல்மி எக்ஸ்.டி. ஸ்மார்ட்போனின் புதிய வேரியண்ட் செப்டம்பர் 24 ஆம் தேதி அறிமுகம் செய்யஇருப்பதாக தெரிவித்து இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் ரியல்மி எக்ஸ்2 என அழைக்கப்படுகிறது.

முன்னதாக இந்த ஸ்மார்ட்போனிற்கான டீசரை ரியல்மி வெளியிட்டது. புதிய ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனில் ரியல்மி எக்ஸ்.டி. மாடலில் உள்ளதை போன்ற அம்சங்களே வழங்கப்படும் என தெரிகிறது. அந்த வகையில் புதிய எக்ஸ்2 ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் சாம்சங் AMOLED வாட்டர் டிராப் ஸ்கிரீன், 64 எம்.பி. குவாட் பிரைமரி கேமராக்கள், 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படுகிறது.



ரியல்மி எக்ஸ்2 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

- 6.4 இன்ச் 2340x1080 பிக்சல் FHD+ AMOLED டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர்
- அட்ரினோ 618 GPU
- 6 ஜி.பி. LPPDDR4x ரேம், 64 ஜி.பி. UFS 2.1 மெமரி
- 8 ஜி.பி. LPPDDR4x ரேம், 128 ஜி.பி. UFS 2.1 மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம் ஸ்லாட்
- கலர் ஒ.எஸ். 6.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 9.0 பை
- 64 எம்.பி. பிரைமரி கேமரா, 1/1.72″ சாம்சங் GW1 சென்சார், 0.8μm பிக்சல், f/1.8, எல்.இ.டி. ஃபிளாஷ், EIS
- 8 எம்.பி. 119° அல்ட்ரா-வைடு ஆங்கில் லென்ஸ், f/2.25, 1.12μm பிக்சல்
- 2 எம்.பி. டெப்த் சென்சார், f/2.4, 1.75μm பிக்சல்
- 2 எம்.பி. 4 செ.மீ. மேக்ரோ, f/2.4, 1.75μm பிக்சல்
- 32 எம்.பி. செல்ஃபி கேமரா
- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யு.எஸ்.பி. டைப்-சி
- 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 30 வாட் VOOC ஃபாஸ்ட் சார்ஜிங்
Tags:    

Similar News