தொழில்நுட்பம்
பிக்சல் 4

பிக்சல் 4 சீரிஸ் அறிமுக விவரம்

Published On 2019-09-17 04:49 GMT   |   Update On 2019-09-17 04:49 GMT
கூகுள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் பிக்சல் 4 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் அறிமுக விவரங்களை பார்ப்போம்.



கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 4 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் பற்றிய பெருமளவு விவரங்கள் இணையத்தில் அடிக்கடி வெளியாகி இருக்கின்றன. இவற்றின் உண்மைத் தன்மை பற்றி எவ்வித தகவலும் இல்லை. 

இந்நிலையில், கூகுள் நிறுவனம் தனது புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்களுக்கான அறிமுக விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி அக்டோபர் 15 ஆம் தேதி நடைபெற இருக்கும் விழாவில் கூகுள் நிறுவனம் புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்களுடன் பிக்சல்புக் 2 அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அக்டோபர் 15 ஆம் தேதி நடைபெற இருக்கும் கூகுள் நிகழ்வில் அந்நிறுவனம் பிக்சல் 4, பிக்சல் 4 XL, பிக்சல்புக் 2, புதிய கூகுள் ஹோம் ஸ்பீக்கர்கள், நெஸ்ட் மினி மற்றும் பல்வேறு புதிய சாதனங்களை அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. கடந்த ஆண்டு கூகுள் நிறுவனம் பிக்சல் 3, பிக்சல் 3 XL, பிக்சல் ஸ்லேட், புதிய க்ரோம்காஸ்ட், நெஸ்ட் ஹப் உள்ளிட்ட சாதனங்களை அறிமுகம் செய்தது.



இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் பிக்சல் 4 XL ஸ்மார்ட்போனில் நாட்ச் இல்லாத 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என தெரிகிறது. செட்டிங்ஸ் செயலியில் இருந்து ஸ்மூத் டிஸ்ப்ளே ஆப்ஷனை தேர்வு செய்யலாம். இது 60 முதல் 90 ஹெர்ட்ஸ்களிடையே செட்டிங்கை தானாக மாற்றிக் கொள்ளும். 

பிக்சல் 4 XL ஸ்மார்ட்போனில் 6.23 இன்ச் 3040x1440 பிக்சல் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், 6 ஜி.பி. ரேம், 12.2 எம்.பி. சோனி IMX363 + 16 எம்.பி. IMX481 டெலிபோட்டோ லென்ஸ் வழங்கப்படுகிறது. முன்புறம் செல்ஃபிக்களை எடுக்க 20 எம்.பி. சோனி IMX520 யூனிட் வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News