தொழில்நுட்பம்
சியோமி Mi 9 லீக்

சியோமி 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதி

Published On 2019-09-16 05:53 GMT   |   Update On 2019-09-16 05:53 GMT
சியோமி நிறுவனத்தின் Mi 9 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.



சியோமி நிறுவனத்தின் Mi 9 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் செப்டம்பர் 24 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. இதே நிகழ்வில் சியோமி தனது அடுத்த தலைமுறை Mi மிக்ஸ் கான்செப்ட் போனையும் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த கான்செப்ட்டில் 108 எம்.பி. சாம்சங் சென்சார் வழங்கப்படலாம் என தெரிகிறது.

இந்த ஸ்மார்ட்போனுடன் MIUI 11 இயங்குதளம் மற்றும் Mi டி.வி. மாடல்களையும் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய Mi 9 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் வையர்டு ஃபாஸ்ட் சார்ஜிங், 30 வாட் வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங், வையர்டு OTG ரிவர்ஸ் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜிங் என நான்கு வித சார்ஜிங் வசதிகளை வழங்க இருக்கிறது.

வையர் மூலம் சார்ஜ் செய்யும் போதே, வயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜிங் வசதியை பயன்படுத்த முடியும். இந்த அம்சம் கொண்டு வயர்லெஸ் முறையில் மற்ற சாதனங்களை சார்ஜ் செய்யலாம்.



சியோமி Mi 9 ப்ரோ 5ஜி எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

- 6.39 இன்ச் 1080x2280 பிக்சல் FHD+ சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 6
- ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் 7என்.எம். பிராசஸர்
- அட்ரினோ 640 GPU
- 6 ஜி.பி. / 8 ஜி.பி. / 12 ஜி.பி. ரேம்
- 128 ஜி.பி. / 256 ஜி.பி. / 512 ஜி.பி. மெமரி
- டூயல் சிம் ஸ்லாட்
- ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் MIUI 10
- 48 எம்.பி. பிரைமரி கேமரா, 1/2.0″ சோனி IMX586 சென்சார், 0.8μm பிக்சல், f/1.75, எல்.இ.டி. ஃபிளாஷ், OIS, லேசர் ஆட்டோஃபோகஸ், PDAF, CAF
- 12 எம்.பி. 1/3.6″ சாம்சங் S5K3M5, f/2.2, 1.0μm பிக்சல், 6P லென்ஸ், 2x லாஸ்லெஸ் சூம்
- 16 எம்.பி. 1/1.3″ சோனி IMX481 117-டிகிரி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.2, 1.0μm பிக்சல், 6P லென்ஸ், 4cm மேக்ரோ
- 20 எம்.பி. செல்ஃபி கேமரா, 0.9μm பிக்சல், f/2.0
- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- யு.எஸ்.பி. டைப்-சி
- 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
- 30 வாட் வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்
Tags:    

Similar News