தொழில்நுட்பம்
வோடபோன்

தினமும் 1.6 ஜி.பி. டேட்டா வழங்கும் வோடபோன் சலுகை

Published On 2019-09-16 04:29 GMT   |   Update On 2019-09-16 04:29 GMT
வோடபோன் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் புதிய சலுகையில் தினமும் 1.6 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.



வோடபோன் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 209 விலையில் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பயனர்களுக்கு தினமும் 1.6 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கும் புதிய சலுகையில் டேட்டா தவிர இதர பலன்களும் வழங்கப்படுகின்றன.

அந்த வகையில் தினசரி டேட்டா மட்டுமின்றி, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவையும் வழங்கப்படுகிறது. புதிய சலுகை அனைத்து வட்டாரங்களிலும் கிடைப்பதாக கூறப்படுகிறது. எனினும், ஐடியா வாடிக்கையாளர்களுக்கு இச்சலுகை சில வட்டாரங்களில் மட்டும் வழங்கப்படுகிறது.



வோடபோன் நிறுவனம் ரூ. 250 விலைக்குள் சுமார் நான்கு மாதாந்திர காம்போ சலுகைகளை வழங்கி வருகிறது. இவற்றின் விலை முறையே ரூ. 169, ரூ. 199, ரூ. 209 மற்றும் ரூ. 229 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏர்டெல் நிறுவனம் ரூ. 250 விலையில் மூன்று சலுகைகளை முறையே ரூ. 169, ரூ. 199 மற்றும் ரூ. 249 கட்டணங்களில் வழங்கி வருகிறது.

சமீபத்தில் ஏர்டெல் நிறுவனம் தனது சேவையின் குறைந்த பட்ச ரீசார்ஜ் தொகையை ரூ.  24 இல் இருந்து ரூ. 20 ஆக குறைத்தது. தற்சமயம் ரூ. 59 விலையில் வாராந்திர சலுகையை வழங்கி வருகிறது. வோடபோன் நிறுவனம் தினமும் 1 ஜி.பி. டேட்டா வழங்குகிறது.

இந்த சலுகைக்கான வேலிடிட்டி ஏழு நாட்கள் ஆகும். அந்த வகையில் பயனர்களுக்கு மொத்தம் 7 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. வோடபோனின் ரூ. 59 விலை சலுகையில் டேட்டா தவிர மற்ற பலன்கள் வழங்கப்படவில்லை,
Tags:    

Similar News