தொழில்நுட்பம்
ஐபோன் 11

டூயல் கேமரா, வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்ட ஐபோன் 11 அறிமுகம்

Published On 2019-09-11 03:52 GMT   |   Update On 2019-09-11 03:52 GMT
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 11 ஸ்மார்ட்போன் 2019 ஆப்பிள் சிறப்பு நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது.



ஆப்பிள் நிறுவனத்தின் 2019 சிறப்பு நிகழ்வில் ஐபோன் 11 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இது அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த ஐபோன் XR மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். புதிய ஐபோன் 11 மாடலில் டூயல் பிரைமரி கேமரா, ஏ13 பயோனிக் சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஏ12 சிப்செட்டை விட 20 சதவிகிதம் வேகமான சி.பி.யு. மற்றும் ஜி.பி.யு. கொண்டிருக்கிறது.

இத்துடன் IP68 தரச்சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது. 6.1 இன்ச் லிக்விட் ரெட்டினா டிஸ்ப்ளே கொண்டிருக்கும் ஐபோன் 11 மாடலின் டிஸ்ப்ளே பயனர்களுக்கு சிறப்பான அனுபவம் வழங்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது. இதில் வழங்கப்பட்டுள்ள பேட்டரி முந்தைய ஐபோன் XR மாடலை விட ஒரு மணி நேரம் கூடுதல் பேக்கப் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



ஆப்பிள் ஐபோன் 11 சிறப்பம்சங்கள்:

- 6.1 இன்ச் 1792x828 பிக்சல் LCD 326ppi லிக்விட் ரெட்டினா டிஸ்ப்ளே
- A13 பயோனிக் 64-பிட் பிராசஸர், 8-கோர் நியூரல் என்ஜின்
- 64 ஜி.பி., 128 ஜி.பி. மற்றும் 256 ஜி.பி. மெமரி ஆப்ஷன்கள்
- ஐ.ஒ.எஸ். 13
- வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68)
- டூயல் சிம் ஸ்லாட்
- 12 எம்.பி. வைடு ஆங்கிள் கேமரா, f/1.8, OIS, ட்ரூ டோன் ஃபிளாஷ், 4K வீடியோ
- 12 எம்.பி. 120° அல்ட்ரா வைடு கேமரா, f/2.4
- 12 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2
- ட்ரூ டெப்த் கேமரா
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- லித்தியம் அயன் பேட்டரி
- Qi வயர்லெஸ் சார்ஜிங்

ஐபோன் 11 ஸ்மார்ட்போன் பர்பபிள், கிரீன், எல்லோ, பிளாக், வைட் மற்றும் பிராடக்ட் ரெட் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 64,900 முதல் துவங்குகிறது. ஐபோன் 11 விற்பனை செப்டம்பர் 27 ஆம் தேதி துவங்குகிறது.
Tags:    

Similar News