தொழில்நுட்பம்
சாம்சங் கேலக்ஸி ஏ10எஸ்

டூயல் பிரைமரி கேமரா, 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன் பட்ஜெட் விலையில் அறிமுகமான சாம்சங் ஸ்மார்ட்போன்

Published On 2019-08-27 11:19 GMT   |   Update On 2019-08-27 11:19 GMT
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ10எஸ் ஸ்மார்ட்போன் டூயல் பிரைமரி கேமரா, 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ10எஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது அந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த கேலக்ஸி ஏ10 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் ஆகும்.

புதி்ய கேலக்ஸி ஏ10எஸ் ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி வி டிஸ்ப்ளே, எக்சைனோஸ் ஆக்டா-கோர் பிராசஸர், ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் மற்றும் சாம்சங்கின் ஒன் யு.ஐ. வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா மற்றும் 8 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் கேலக்ஸி ஏ10எஸ் ஸ்மார்ட்போனில் ஃபேஸ் அன்லாக் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட் மற்றும் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.



சாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் சிறப்பம்சங்கள்:

- 6.2 இன்ச் 1520x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி வி டிஸ்ப்ளே
- ஆக்டா-கோர் எக்சைனோஸ் பிராசஸர்
- 2 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி
- 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் சாம்சங் ஒன் யு.ஐ.
- டூயல் சிம் ஸ்லாட்
- 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8
- 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
- 8 எம்.பி. செல்ஃபி கேமரா
- கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- 4,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

சாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் ஸ்மார்ட்போன் புளு, கிரீன், ரெட் மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 2 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 9,499 என்றும் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 10,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தளங்களில் ஆகஸ்ட் 28 ஆம் தேதி துவங்குகிறது.
Tags:    

Similar News