தொழில்நுட்பம்
கேலக்ஸி எம்30 - கோப்புப்படம்

மூன்று பிரைமரி கேமரா கொண்ட கேலக்ஸி ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம்

Published On 2019-08-27 04:27 GMT   |   Update On 2019-08-27 04:27 GMT
சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன் மூன்று பிரைமரி கேமராவுடன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.



சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போன் இந்தியாவில் இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில், கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

அதன்படி புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் கேலக்ஸி எம்30எஸ் என்ற பெயரில் அடுத்த மாத துவக்கத்தில் அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. புதிய ஸ்மார்ட்போனில் மூன்று கேமரா சென்சார்கள் வழங்கப்படும் என்றும் இதன் பிரைமரி சென்சார் 48 எம்.பி. லென்ஸ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.



கேலக்ஸி எம்30எஸ் ஸ்மார்ட்போனில் எக்சைனோஸ் பிராசஸர் வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் அதிக திறன் கொண்ட பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. கேலக்ஸி  எம் சீரிஸ் என்பதால் இதன் விலை ரூ. 20,000 பட்ஜெட்டில் நிர்ணயிக்கப்படும் என தெரிகிறது.
 
இதன் விற்பனை அடுத்த மாதம் துவங்க இருக்கும் நிலையில், இதுபற்றிய விவரங்கள் வரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
Tags:    

Similar News