தொழில்நுட்பம்
ஐபோன் 11 லீக்

யு.எஸ்.பி. டைப்-சி சார்ஜருடன் வரும் ஐபோன் 11

Published On 2019-08-22 05:45 GMT   |   Update On 2019-08-22 05:45 GMT
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 11 யு.எஸ்.பி. டைப்-சி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதிகளை கொண்டிருக்கும் என தெரிகிறது.



ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஐபோன் 11 மாடலில் 5வாட் சார்ஜருக்கு மாற்றாக யு.எஸ்.பி. டைப்-சி சார்ஜர் வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக வெளியான தகவல்களில் புதிய ஐபோன்கள் செப்டம்பர் 10 ஆம் தேதி அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 2019 ஐபோன் சீரிஸ் ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோ மற்றும் ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் என மூன்று மாடல்களை அறிமுகம் செய்யலாம் என தெரிகிறது.

ஐபோன் XS மற்றும் ஐபோன் XR மாடல்களுடன் யு.எஸ்.பி. டைப்-சி சார்ஜரை வழங்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், வழக்கம்போல் யு.எஸ்.பி. டைப்-ஏ போர்ட் வழங்கியது. சார்ஜிங் சாதனங்கள் சார்ந்த விவரங்களை வழங்கும் வலைத்தளம் ஒன்றில் ஐபோன் 11 யு.எஸ்.பி. டைப்-சி சார்ஜருடன் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



புதிய ஐபோன் யு.எஸ்.பி. டைப்-சி போர்ட்டில் இருந்து லைட்னிங் கேபிள் இணைப்பு வழங்கப்படலவாம். இதுவரை வெளியான ஐபோன் மாடல்களில் ஆப்பிள் வழக்கமான சார்ஜர்களையே வழங்கி வருகிறது. இது யு.எஸ்.பி. டைப்-ஏ போர்ட் ஆகும். இது யு.எஸ்.பி. டைப்-ஏ-வில் இருந்து லைட்னிங் கேபிள் இணைப்பு வழங்கப்படுகிறது.

சமீபத்திய ஐபேட் ப்ரோ மாடல்கள் யு.எஸ்.பி. டைப்-சி சார்ஜர் மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கிடைக்கிறது. முன்னதாக மார்ச் மாதத்தில் வெளியான தகவல்களிலும் 2019 ஐபோன்களுடன் யு.எஸ்.பி. டைப்-சி சார்ஜர் வழங்கப்படலாம் என கூறப்பட்டிருந்தது.

புதிய சார்ஜர் தவிர ஐபோன் 11 மாடலில் முந்தைய ஐபோன் XS மற்றும் ஐபோன் XR மாடல்களில் இருந்ததை விட மேம்பட்ட அம்சங்கள் வழங்கப்படலாம். புதிய மாடலில் சதுரங்க வடிவம் கொண்ட கேமரா பம்ப் மற்றும் மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள் வழங்கப்படலாம். இத்துடன் ஆப்பிளின் ஏ13 சிப்செட், புதிய டேப்டிக் என்ஜின் வழங்கப்படலாம். 
Tags:    

Similar News