தொழில்நுட்பம்
நோக்கியா 7.2 லீக்

இணையத்தில் லீக் ஆன மூன்று பிரைமரி கேமரா கொண்ட நோக்கியா ஸ்மார்ட்போன்

Published On 2019-08-22 04:39 GMT   |   Update On 2019-08-22 04:39 GMT
ஹெச்.எம்.டி. குளோபல் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கும் நோக்கியா ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.



ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 7.1 ஸ்மார்ட்போனினை ஹெச்.டி.ஆர். பியூர்வியூ டிஸ்ப்ளே, இரட்டை பிரைமரி கேமரா, செய்ஸ் ஆப்டிக்ஸ் உள்ளிட்ட அம்சங்களுடன் கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. 

நோக்கியா 7.1 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷனாக நோக்கியா 7.2 உருவாகி வருகிறது. இந்நிலையில், நோக்கியா 7.2 ஸ்மார்ட்போனின் விவரங்கள் தற்சமயம் வெளியாகியுள்ளது. இதில் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் தெரியவந்துள்ளது.

அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், நோக்கியா 7.2 ஸ்மார்ட்போனின் விவரங்கள் சில ஊடக நிறுவனங்களை சேர்ந்தவர்களுக்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. செய்ஸ் குழுமத்தை சேர்ந்த ஜோச்சிம் குஸ் நோக்கியா 7.2 கேமரா திறன் சந்தையில் நல்ல வரவேற்பை பெறும் என தெரிவித்து, ஸ்மார்ட்போனின் பின்புறம் தெரியும் புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.



அதன்படி நோக்கியா 7.2 மாடலில் வட்ட வடிவ கேமரா மாட்யூலில் மொத்தம் மூன்று கேமரா சென்சார்கள் மற்றும் எல்.இ.டி. ஃபிளாஷ் காணப்படுகிறது. இதில் 48 எம்.பி. பிரைமரி சென்சார், வைடு ஆங்கில் சென்சார் மற்றும் டெப்த் சென்சிங் யூனிட் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புகைபடத்தின் படி கேமரா சென்சாரின் கீழ் கைரேகை சென்சார் காணப்படுகிறது. இதுதவிர நோக்கியா 7.2 ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் FHD பிளஸ் டிஸ்ப்ளே, ஹெச்.டி.ஆர். 10 வசதி, அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி வழங்கப்படலாம். இது அடுத்த மாதம் நடைபெற இருக்கும் ஐ.எஃப்.ஏ. 2019 விழாவில் நோக்கியா 6.2 ஸ்மார்ட்போனுடன் அறிமுகம் செய்யப்படலாம்.
Tags:    

Similar News