தொழில்நுட்பம்
ரியல்மி 5 ப்ரோ டீசர்

ரியல்மி 5 விலை இத்தனை குறைவாக நிர்ணயிக்கப்படுகிறதா?

Published On 2019-08-14 04:24 GMT   |   Update On 2019-08-14 04:24 GMT
ரியல்மி பிராண்டு விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கும் ரியல்மி 5 ஸ்மார்ட்போனின் விலை விவரங்களை பார்ப்போம்.



சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ரியல்மி ஆகஸ்ட் 20 ஆம் தேதி இந்தியாவில் ரியல்மி 5 சீரிஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது. ரியல்மி 5 மற்றும் ரியல்மி 5 ப்ரோ என இரு ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ரியல்மி 5 ப்ரோ ஸ்மார்ட்போன் நான்கு பிரைமரி கேமரா கொண்டிருக்கிறது.

ரியல்மி 5 ஸ்மார்ட்போன் விலை இந்தியாவில் ரூ. 10,000-க்குள் நிர்ணயிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இதன் பேஸ் மாடல் விலை ரூ. 8,999 முதல் துவங்கலாம் என தெரிகிறது. புதிய ரியல்மி ஸ்மார்ட்போனில் ஹெச்.டி. பிளஸ் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 600 சீரிஸ் சிப்செட் வழங்கப்படலாம்.

முன்னதாக ரியல்மி 5 ப்ரோ ஸ்மார்ட்போன் 48 எம்.பி. குவாட் கேமரா செட்டப் கொண்டிருக்கும் என ரியல்மி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதில் 48 எம்.பி. பிரைமரி கேமராவுடன் செங்குத்தாக பொருத்தப்பட்ட நிலையில், மூன்று கேமரா சென்சார்கள் வழங்கப்படுகிறது.



இவற்றில் பிரைமரி சென்சாருடன், அல்ட்ரா-வைடு சென்சார், சூப்பர் மேக்ரோ சென்சார், டெப்த் சென்சார் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. 48 எம்.பி. கேமராவுடன் நான்கு சென்சார்கள் கொண்ட இந்தியாவின் முதல் ஸ்மார்ட்போனாக இது இருக்கும் என ரியல்மி தெரிவித்திருக்கிறது.

ரியல்மி 5 ப்ரோ ஸ்மார்ட்போனில் AMOLED டிஸ்ப்ளே, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், குவால்காம் ஸ்னாப்டிராகன் 712 சிப்செட், ஆக்டா-கோர் க்ரியோ 360 கோர் பிராசஸர் வழங்கப்படலாம் என தெரிகிறது. இதன் பிரைமரி கேமராவில் சோனியின் IMX586 சென்சார் வழங்கப்படலாம்.

இத்துடன் புதிய ரியல்மி ஸ்மார்ட்போனில் கிளாஸி பேக் பேனல், பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது. ரியல்மி 5 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கின்றன.
Tags:    

Similar News