தொழில்நுட்பம்
கேலக்ஸி ஏ70 கோப்புப்படம்

64 எம்.பி. கேமரா கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போன்

Published On 2019-08-09 11:34 GMT   |   Update On 2019-08-09 11:34 GMT
சாம்சங் நிறுவனத்தின் 64 எம்.பி. கேமரா கொண்ட கேலக்ஸி ஸ்மார்ட்போனின் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அதிக பிரபலமாகி வருகிறது. இதுவரை கேலக்ஸி ஏ20, கேலக்ஸி ஏ30 மற்றும் கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கும் நிலையில், சாம்சங் புதிதாக மூன்று கேலக்ஸி ஏ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.

அந்த வகையில் கேலக்ஸி ஏ20எஸ், கேலக்ஸி ஏ30எஸ் மற்றும் கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போன்கள் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம். இதில் கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. புதிய கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போனில் 64 எம்.பி. பிரைமரி கேமரா  வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.



புதிய ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சமாக 64 எம்.பி. கேமரா இருக்கிறது. இதில் சாம்சங்கின் சொந்த ISOCELL பிரைட் GW1 சென்சார் வழங்கப்படுகிறது. ஏற்கனவே ரியல்மி மற்றும் சியோமி நிறுவனங்கள் தங்களின் 64 எம்.பி. கேமரா ஸ்மார்ட்போன் பற்றிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. இவை இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களின் படி கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போன் SM-A707F எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கும் என்றும் இதில் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர் மற்றும் 6 ஜி.பி. ரேம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. மென்பொருளை பொருத்தவரை புதிய ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு பை சார்ந்த ஒன் யு.ஐ. கொண்டிருக்கும் என தெரிகிறது.
Tags:    

Similar News