தொழில்நுட்பம்
ஆப்பிள் கோப்புப்படம்

ஆப்பிள் நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்

Published On 2019-07-28 08:46 GMT   |   Update On 2019-07-28 08:46 GMT
ஆப்பிள் உற்பத்தி ஆலையை சீனாவிற்கு மாற்றும் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆப்பிள் நிறுவனத்தை எச்சரித்துள்ளார்.



ஆப்பிள் நிறுவனத்தின் மேக் ப்ரோ கம்ப்யூட்டரின் பாகங்களை சீனாவில் உற்பத்தி செய்ய அந்நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. சீனாவில் உற்பத்தி செய்யப்படும் பாகங்களை அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்ய வரிச்சலுகைகளை ஆப்பிள் அமெரிக்க அரசிடம் கேட்டுக் கொண்டிருந்தது.

இதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்விட்டரில் பதில் அளித்திருக்கிறார். அதில், 'மேக் ப்ரோ பாகங்கள் சீனாவில் உற்பத்தி செய்யப்பட்டால், அவற்றுக்கு வரிச்சலுகை அளிக்க முடியாது. முடிந்தால் பாகங்களை அமெரிக்காவிலேயே உருவாக்கிக் கொள்ளுங்கள். வரிச்சலுகை அளிக்க முடியாது', என டிரம்ப் ட்விட் செய்தார்.



வர்த்தக போட்டி தீவிரமடைந்திருப்பதால், ஆப்பிள் நிறுவனம் தனது புதிய மேக் ப்ரோ சாதனத்திற்கான பாகங்களை சீனாவில் உருவாக்க திட்டமிட்டது. தற்சமயம் மேக் சாதனம் மட்டுமே டெக்சாஸ் மாநிலத்தின் ஆஸ்டின் பகுதியில் உருவாக்கப்படுகிறது. ஐபோன், ஐபேட் போன்ற சாதனங்கள் சீனாவில் உருவாக்கப்படுகின்றன.

ஆப்பிள் நிறுவனம் தாய்வானை சேர்ந்த குவாண்டா கம்ப்யூட்டர் எனும் நிறுவனத்துடன் இணைந்து 6000 டாலர் மதிப்புள்ள புதிய மேக் ப்ரோ கம்ப்யூட்டரை உருவாக்க திட்டமிட்டிருக்கிறது. இதற்கென ஷாங்காயில் தயாரிப்பு ஆலை உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்பிள் நிறுவன சாதனங்களை சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு மாற்றிக் கொள்ள டிம் குக்கிடம் டிரம்ப் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
Tags:    

Similar News