தொழில்நுட்பம்
ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர்

ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர் கொண்ட பிளாக் ஷார்க் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி

Published On 2019-07-22 06:37 GMT   |   Update On 2019-07-22 06:37 GMT
பிளாக் ஷார்க் நிறுவனம் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர் கொண்ட பிளாக் ஷார்க் 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது.
பிளாக் ஷார்க் நிறுவனம் தனது பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் சமீபத்தில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் வழங்கப்பட்டது. தற்சமயம் பிளாக் ஷார்க் நிறுவனம் பிளாக் ஷார்க் 2 மாடலின் மற்றொரு வேரியண்ட்டை அறிமுகம் செய்ய இருக்கிறது.

அந்த வகையில் பிளாக் ஷார்க் நிறுவனம் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர் கொண்ட பிளாக் ஷார்க் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் ஜூலை 30 ஆம் தேதி சீனாவில் அறிமுகமாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதே ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என பிளாக் ஷார்க் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.



முன்னதாக குவால்காம் நிறுவனம் தனது ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் எனும் புதிய பிராசஸரை அறிமுகம் செய்தது. இது முந்தைய ஸ்னாப்டிராகன் 855 பிராசஸரின் மேம்பட்ட மாடலாகும். இந்த பிராசஸர் சிறப்பான 5ஜி கனெக்டிவிட்டியை வழங்கும் என குவால்காம் தெரிவித்துள்ளது.

இத்துடன் முந்தைய பிராசஸரை விட ஏ.ஐ. கம்ப்யூட்டிங் மற்றும் சிறப்பான மொபைல் கேமிங் அனுபவத்தை இந்த பிராசஸர் வழங்கும். பிராசஸரின் உள்புறத்தில் அதிகளவு மாற்றங்கள் செய்யப்படவில்லை. ஸ்னாப்டிராகன் 855 பிராசஸரில் 2.84 ஜிகாஹெர்ட்ஸ் வேகம் வழங்கும் க்ரியோ 485 சி.பி.யு. வழங்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர் 2.96 ஜிகாஹெர்ட்ஸ் வேகம் வழங்கும் க்ரியோ 485 சி.பி.யு. கொண்டிருக்கிறது. இத்துடன் புதிய பிராசஸரில் அட்ரினோ 640 ஜி.பி.யு. வழங்கப்பட்டுள்ளது. இது ஸ்னாப்டிராகன் 855 பிராசஸரை விட 15 சதவிகிதம் சிறப்பான செயல்திறன் வழங்கும்.
Tags:    

Similar News