தொழில்நுட்பம்
ஐபோன் 6எஸ்

இந்தியாவில் சில ஐபோன்களின் விற்பனை திடீர் நிறுத்தம்

Published On 2019-07-17 04:30 GMT   |   Update On 2019-07-17 04:30 GMT
ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்த ஐபோன் மாடல்களில் சிலவற்றின் விற்பனையை நிறுத்திக் கொள்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.



ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 6, ஐபோன் 6 பிளஸ், ஐபோன் 6எஸ் பிளஸ் மற்றும் ஐபோன் எஸ்.இ. போன்ற மாடல்களை அறிமுகம் செய்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இதனால் இந்தியாவில் இவற்றின் விற்பனையை நிறுத்திக் கொள்வதாக ஆப்பிள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பழைய ஐபோன் மாடல்களின் விற்பனையை நிறுத்திவிட்டு பிரீமியம் ஐபோன் மாடல்களின் மீது அதிக கவனம் செலுத்த இருப்பதாக தெரிகிறது. மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் நான்கு ஐபோன் மாடல்களும் திரும்ப பெறப்பட்டன. இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் துவக்க மாடல் ஐபோனாக ஐபோன் 6எஸ் இருக்கிறது.



விற்பனை நிறுத்தம் பற்றி விநியோகஸ்தர்கள் மற்றும் விற்பனை குழுவினருக்கு ஏற்கனவே தகவல் வழங்கப்பட்டு விட்டது. இந்தியாவில் ஐபோன் XR விலை குறைக்கப்பட்டது முதல் ஐபோன் மூலம் கிடைக்கும் வருவாய் அதிகரித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய நடவடிக்கை மூலம் ஆப்பிள் நிறுவனம் பிரீமியம் ஐபோன் மாடல்களில் கூடுதல் கவனம் செலுத்த இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஐபோன் வாங்குவோருக்கு பை-பேக் மற்றும் கேஷ்பேக் சலுகைகள் வழங்கப்படுகின்றன. இச்சலுகைகள் ஐபோன் XS, ஐபோன் XS மேக்ஸ் மாடல்களுக்கு முதற்கட்டமாக வழங்கப்படும் என தெரிகிறது.

ஆப்பிள் நிறுவனம் முதல் முறையாக தனது ஐ.ஒ.எஸ். 13 தளத்தை இந்திய வாடிக்கையாளர்களுக்கென கஸ்டமைஸ் செய்ய இருக்கிறது. இது புதிய தளத்தை 22 இந்திய மொழிகளில் பயன்படுத்தும் வசதியை வழங்கும். இதுதவிர இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட ஐபோன் XR, ஐபோன் XS மாடல்கள் அடுத்த மாதம் முதல் விற்பனைக்கு வருகிறது.
Tags:    

Similar News