தொழில்நுட்பம்
நோக்கியா 9 பியூர் வியூ

ஐந்து கேமராவுடன் நோக்கியா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

Published On 2019-07-10 11:24 GMT   |   Update On 2019-07-10 11:24 GMT
ஹெச்.எம்.டி. குளோபல் ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் ஐந்து கேமரா கொண்ட நோக்கியா ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது.



ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இந்தியாவில் தனது ஃபிளாக்‌ஷிப் நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போனில் புகைப்படங்களை எடுக்க ஐந்து பிரைமரி கேமராக்கள்: இரு ஆர்.ஜி.பி. மற்றும் மூன்று மோனோக்ரோம் லென்ஸ் வழங்கப்பட்டிருக்கிறது. 

மற்ற அம்சங்களை பொருத்தவரை நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனில் 5.99 இன்ச் குவாட் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர், 6 ஜி.பி. ரேம், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. IP67 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கும் நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் 3320 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.



நோக்கியா 9 பியூர் வியூ சிறப்பம்சங்கள்:

- 5.99 இன்ச் 2560x1440 பிக்சல் குவாட் ஹெச்.டி. pOLED டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- 2.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 845 64-பிட் 10 என்.எம். பிராசஸர்
- அட்ரினோ 630 GPU
- 6 ஜி.பி. ரேம்
- 128 ஜி.பி. மெமரி
- ஆண்ட்ராய்டு 9.0 பை
- 12 எம்.பி. (2 x RBG, 3 x மோனோ) ஐந்து பிரைமரி கேமராக்கள், f/1.82, எல்.இ.டி. ஃபிளாஷ்
- 20 எம்.பி. செல்ஃபி கேமரா
- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி (IP67)
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
- 3320 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- ஃபாஸ்ட் சார்ஜிங்
- வயர்லெஸ் சார்ஜிங்

நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் மிட்நைட் புளு நிறத்தில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ.49,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை இன்று (ஜூலை 10) முதல் ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெறுகிறது. ஜூலை 17 ஆம் தேதி முதல் மற்ற விற்பனை மையங்களில் கிடைக்கும்.
Tags:    

Similar News