தொழில்நுட்பம்
பிக்சல் 4 டீசர்

இணையத்தில் லீக் ஆன கூகுள் பிக்சல் 4 XL

Published On 2019-07-09 11:34 GMT   |   Update On 2019-07-09 11:34 GMT
கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 4 XL ஸ்மார்ட்போனின் புதிய ரென்டர்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.



கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 4 ஸ்மார்ட்போனின் முதல் அதிகாரப்பூர்வ டீசரில் ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு பற்றிய விவரங்கள் வெளியானது. அதன்படி ஸ்மார்ட்போனின் பின்புறம் சதுரங்க கேமரா மாட்யூல் வழங்கப்படுகிறது. இந்நிலையில், பிக்சல் 4 XL ஸ்மார்ட்போனின் ரென்டர்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

இதில் ஸ்மார்ட்போன் சதுரங்க கேமரா மாட்யூல், மூன்று பிரைமரி கேமரா யூனிட் கொண்டிருப்பதும், முன்புறம் இரட்டை செல்ஃபி கேமரா மற்றும் தடிமனான நாட்ச் கொண்டிருக்கிறது. பின்புறம் மூன்று கேமரா சென்சார்களுடன் எல்.இ.டி. ஃபிளாஷ் வழங்கப்படுகிறது. மூன்று பிரைமரி கேமராக்களில் ஒன்று 16 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.




கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்களில் வழக்கமாக டூயல் டோன் ஃபினிஷ் செய்யப்படும் நிலையில், புதிய மாடலில் கிளாஸி ஃபினிஷ் செய்யப்படும் என தெரிகிறது. மேலும் ஸ்மார்ட்போனின் பின்புறம் கிளாஸ் மூலம் உருவாக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. ரென்டர்களிலும் 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் வழங்கப்படுகிறது.

இத்துடன் பின்புறம் கைரேகை சென்சார் நீக்கப்பட்டுள்ளதால், புதிய ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படும் என தெரிகிறது. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி கூகுள் தனது புதிய ஸ்மார்ட்போன்களில் நாட்ச் வடிவமைப்பிற்கு மாற்றாக தடிமனான நாட்ச் வழங்கும் என தெரிகிறது.

நாட்ச் பகுதயில் இரட்டை செல்ஃபி கேமராக்கள், இயர்பீஸ் மற்றும் சென்சார்களை வழங்குகிறது. மேல்புறத்தை போன்று ஸ்மார்ட்போன் கீழ் பகுதியிலும் தடிமனாக இருக்கும் என கூறப்படுகிறது.

புகைப்படம் நன்றி: Onleaks
Tags:    

Similar News