தொழில்நுட்பம்
ரெட்மி கே20

இந்தியாவில் ரெட்மி கே20 முன்பதிவு துவக்கம்

Published On 2019-07-09 05:04 GMT   |   Update On 2019-07-09 05:04 GMT
ரெட்மி பிராண்டு ரெட்மி கே20 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய முன்பதிவு தேதி மற்றும் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



சியோமி பிராண்டு இந்தியாவில் தனது ரெட்மி கே20 மற்றும் கே20 ப்ரோ ஸ்மார்ட்போன்களை ஜூலை 17 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்நிலையில், அறிமுகம் செய்வதற்கு முன் இரு மாடல்களுக்கும் பிரீ-லான்ச் ஆல்ஃபா சேல் அறிவித்துள்ளது. இதன் மூலம் பயனர்கள் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் முன்னதாகவே அவற்றை வாங்க முன்பதிவு செய்யலாம்.



ரெட்மி கே20 மற்றும் ரெட்மி கே20 ப்ரோ மாடல்களை முன்பதிவு செய்வது எப்படி?

- ப்ளிப்கார்ட் தளத்தில் ஜூலை 12 ஆம் தேதி மதியம் 12.00 மணிக்கு ரூ. 855 செலுத்தி ஸ்மார்ட்போனினை முன்பதிவு செய்யலாம்.

- ஸ்மார்ட்போன் அறிமுகமானதும் அதற்கான தொகையை செலுத்தி வாங்கிக் கொள்ளலாம்.

- ஆல்ஃபா சேல் கட்டணம் பயன்படுத்தப்படாமல் போகும் பட்சத்தில் அந்த தொகை பயனர்களின் Mi அக்கவுண்ட்டில் சேர்க்கப்பட்டு விடும். ப்ளிப்கார்ட் பயனர்கள் இதனை ப்ளிப்கார்ட் தளத்தில் பொருட்களை வாங்க பயன்படுத்திக் கொள்ளலாம்.



இரு ஸ்மார்ட்போன்களிலும் 6.39 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு பை மற்றும் MIUI 10 இயங்குதளம், 48 எம்.பி. பிரைமரி கேமரா, சோனி IMX586 சென்சார், 8 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், 13 எம்.பி. 124.8° அல்ட்ரா-வைடு சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

இத்துடன் 20 எம்.பி. பாப்-அப் செல்ஃபி கேமரா, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 3D வளைந்த வடிவமைப்பு, 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. 

ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம் கொண்டிருக்கிறது. ரெட்மி கே20 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News