தொழில்நுட்பம்
10.ஆர் ஜி2

6 ஜி.பி. ரேம், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன் புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

Published On 2019-06-30 06:31 GMT   |   Update On 2019-06-30 06:31 GMT
10.ஆர் பிராண்டு இந்தியாவில் தனது புதிய ஸ்மார்ட்போனினை அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம் மற்றும் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன் அறிமுகம் செய்துள்ளது.



10.ஆர் (டெனார்) பிராண்டின் புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போன் 10.ஆர் ஜி2 என அழைக்கப்படுகிறது. இது அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த 10.ஆர் ஜி ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடல் ஆகும்.

புதிய 10.ஆர் ஜி2 ஸ்மார்ட்போனில் 6.18 இன்ச் FHD பிளஸ் 2246×1080 பிக்சல் 19:9 2.5D டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு, குவால்காம் ஸ்னாப்டிராகன் 636 ஆக்டா-கோர் பிராசஸர், 4 ஜி.பி. / 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டுள்ளது. இதன் பின்புறம் கைரேகை சென்சார் இடம்பெற்றுள்ளது.

புகைப்படங்களை எடுக்க 16 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது. இது அதிக வெளிச்சமுள்ள பகுதிகளிலும், குறைவான வெளிச்சமுள்ள பகுதிகளிலும் சீராக இயங்கும். செல்ஃபி எடுக்க 12 எம்.பி. கேமரா மற்றும் ஃபிளாஷ் யூனிட் வழங்கப்பட்டுள்ளது. 

புதிய 10.ஆர் ஜி2 ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இதனுடன் பேட்டரியை வேகமாக சார்ஜ் செய்ய 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.



10.ஆர் ஜி2 சிறப்பம்சங்கள்:

– 6.18 இன்ச் 2246×1080 பிக்சல் 2.5D டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ்
– ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 636 பிராசஸர்
– அட்ரினோ 509 GPU
– 4 ஜி.பி. / 6 ஜி.பி. ரேம்
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 9.0 பை
– டூயல் சிம் + மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட்
– 16 எம்.பி. பிரைமரி கேமரா
– 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
– 12 எம்.பி. செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
– கைரேகை சென்சார்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
– 4ஜி வோல்ட்இ, வைபை
– 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

10.ஆர் ஜி2 ஸ்மார்ட்போன் சார்கோல் பிளாக் மற்றும் டுவிலைட் புளு என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை ஜூலை 15 ஆம் தேதி அமேசான் பிரைம் டே 2019 போது துவங்குகிறது. இந்தியாவில் இதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.
Tags:    

Similar News