தொழில்நுட்பம்

விரைவில் இந்தியா வரும் சியோமி ரெட்மி 7ஏ

Published On 2019-06-28 04:13 GMT   |   Update On 2019-06-28 04:13 GMT
சியோமி நிறுவனத்தின் ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



சியோமி நிறுவனத்தின் ரெட்மி தனி பிராண்டாக இந்த ஆண்டு துவக்கத்தில் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ரெட்மி பிராண்டிங் கொண்ட மூன்று ஸ்மார்ட்போன்களை சியோமி அறிமுகம் செய்தது. இதில் இரு ஸ்மார்ட்போன்கள் ஏற்கனவே இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது. தற்சமயம் ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடு பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளது.

சியோமி நிறுவனத்தின் புதிய ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் என சியோமி இந்தியா விளம்பர பிரிவு தலைவர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் புதிய ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போன் ரெட்மி கே20 மற்றும் ரெட்மி கே20 ப்ரோ மாடல்களுடன் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.

ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போனினை சியோமி நிறுவனம் சீனாவில் ஏற்கனவே அறிமுகம் செய்து விட்டது. சிறப்பம்சங்களை பொருத்தவரை ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போனில் 5.45 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 720×1440 பிக்சல் ஐ.பி.எஸ். எல்.சி.டி. டிஸ்ப்ளே, 1.95 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 439 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.



மெமரியை பொருத்தவரை ரெட்மி 7ஏ மாடலில் 2 ஜி.பி. ரேம் + 16 ஜி.பி. மெமரி, 2 ஜி.பி. ரேம் + 32 ஜி.பி. மெமரி மற்றும் 3 ஜி.பி. ரேம் + 32 ஜி.பி. மெமரி என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது. 

இத்துடன் புகைப்படங்களை அழகாக்க ஏ.ஐ. அம்சங்கள் மற்றும் பல்வேறு கேமரா மோட்கள் கிடைக்கிறது. முன்புறம் 5 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போனில் 10 வாட் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

கனெக்டிவிட்டியை பொருத்தவரை டூயல் சிம் ஸ்லாட், 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 4.2,. ஜி.பி.எஸ்., மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட் மற்றும் 3.5 எம்.எம். ஹெட்போன் ஜாக் கொண்டிருக்கிறது.
Tags:    

Similar News