தொழில்நுட்பம்

ஹூவாய் மேட் எக்ஸ் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் வெளியீட்டு விவரங்கள்

Published On 2019-06-24 05:45 GMT   |   Update On 2019-06-24 05:45 GMT
ஹூவாய் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் மேட் எக்ஸ் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஹூவாய் நிறுவனம் தனது மேட் எக்ஸ் மடிக்கக்கூடிய 5ஜி ல்மார்ட்போனினை இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்தது. இதன் விற்பனை தேதி குறிப்பிடப்படாமல் பின்னர் துவங்கும் என ஹூவாய் தெரிவித்தது. வெளியீடு தாமதமான நிலையில் ஹூவாய் மேட் எக்ஸ் விற்பனை பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஹூவாய் நிறுவனத்தின் மேற்கத்திய பகுதிகளுக்கான தலைவர் வின்சென்ட் பேங் ஹூவாயின் மேட் எக்ஸ் மடிக்கக்கூடிய 5ஜி ஸ்மார்ட்போன் செப்டம்பர் மாத துவக்கத்திலோ அல்லது இறுதியிலோ அறிமுகமாகும் என தெரிவித்திருக்கிறார். புதிய ஸ்மார்ட்போன் 5ஜி சேவை கிடைக்கும் சந்தைகளில் ஆண்ட்ராய்டு இயங்குதளத்துடன் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹூவாயின் மடிக்கக்கூடிய 5ஜி ஸ்மார்ட்போன் தாமதத்திற்கு சீனாவில் 5ஜி சேவை வெளியீட்டில் ஏற்பட்ட தொய்வு தான் காரணம் என அவர் பேங் தெரிவித்தார். சாதனத்தில் வழங்கப்பட்டுள்ள P-OLED ஸ்கிரீன் மேம்படுத்தப்பட்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். இதன் மூலம் சாம்சங் சந்தித்த பிரச்சனைகளை ஹூவாய் சந்திக்கக்கூடாது என்பதற்காக மீண்டும் சோதனை செய்யப்பட்டது.



சிறப்பம்சங்களை பொருத்தவரை மேட் எக்ஸ் ஸ்மார்ட்போனில் 6.6 இன்ச் (2480x1148 பிக்சல்) மெயின் டிஸ்ப்ளேவும், ஸ்மார்ட்போன் திறக்கப்பட்ட நிலையில் 8-இன்ச் மெயின் டிஸ்ப்ளே (2480x2200 பிக்சல்), ஸ்மார்ட்போன் மடிக்கப்பட்ட நிலையில் பின்புறம் 6.4 இன்ச் (25:9. 2480x892 பிக்சல்) டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.

இத்துடன் 7 என்.எம். 5ஜி மல்டி-மோட் மோடெம் வழங்கப்பட்டுள்ளது. பலோங் 5000 பிளஸ் கிரின் 980 பிராசஸர் கொண்டிருக்கும் ஹூவாய் மேட் எக்ஸ் ஸ்மார்ட்போனில் ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட் மற்றும் ஹூவாயின் நானோ மெமரி கார்டுகளை சப்போர்ட் செய்கிறது.

ஸ்மார்ட்போன் மடிக்கப்பட்ட நிலையில் வெறும் 11 எம்.எம். அளவு தடிமனாக இருக்கிறது. அதிவேக 5ஜி வசதியை வழங்கும் மேட் எக்ஸ் ஸ்மார்ட்போன் 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

Tags:    

Similar News