தொழில்நுட்பம்

இந்தியாவில் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வரும் எல்.ஜி. டபுள்யூ ஸ்மார்ட்போன்

Published On 2019-06-22 08:26 GMT   |   Update On 2019-06-22 08:26 GMT
எல்.ஜி. நிறுவனத்தின் புதிய டபுள்யூ சீரிஸ் ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



எல்.ஜி. நிறுவனத்தின் புதிய டபுள்யூ சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜூன் 26 ஆம் தேதி அறிமுகமாக இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது.

முன்னதாக புதிய எல்.ஜி. ஸ்மார்ட்போனில் 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் 12 என்.எம். பிராசஸர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதுதவிர கூகுள் பிளே டெவலப்பர் கன்சோலில் வெளியான விவரங்களில் புதிய ஸ்மார்ட்போன் 6.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 720x1500 பிக்சல் டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் மற்றும் 3 ஜி.பி. ரேம் கொண்டிருக்கும் என கூறப்பட்டது. 

மேலும் இந்த ஸ்மார்ட்போன் டபுள்யூ 10 என்ற பெயரில் அறிமுகமாகும் என்றும் கூறப்படுகிறது. எல்.ஜி. நிறுவனம் இந்தியாவில் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து நீண்ட காலம் ஆகிவிட்டது. இந்நிலையில், புதிய டபுள்யூ சீரிஸ் மூலம் அந்நிறுவனம் பட்ஜெட் பிரிவில் ரீ-எண்ட்ரி கொடுக்க இருப்பதாக தெரிகிறது. 



எல்.ஜி.யின் புதிய டபுள்யூ சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சாம்சங்கின் கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே எல்.ஜி. டபுள்யூ சீரிஸ் ஸ்மார்ட்போனின் டீசரை அமேசான் தனது அமேசான் ஸ்பெஷல்ஸ் பிரிவில் வெளியிட்டது. 

எல்.ஜி. டபுள்யூ சீரிஸ் ஸ்மார்ட்போனில் நாட்ச் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. மேலும் இதனை பயனர் விரும்பும் வகையில் கஸ்டமைஸ் செய்து கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது. இத்துடன் ஏ.ஐ. மூலம் இயங்கும் மூன்று பிரைமரி கேமரா சென்சார்களும் வழங்கப்படுகிறது. இவற்றில் வழக்கமான லென்ஸ், வைடு ஆங்கிள் லென்ஸ் மற்றும் போர்டிரெயிட் மோட் புகைப்படங்களை எடுக்க ஒரு லென்ஸ் இடம்பெறுகிறது. 
Tags:    

Similar News