தொழில்நுட்பம்

கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனின் கேமரா இந்த திறன் கொண்டிருக்கும்

Published On 2019-06-21 05:04 GMT   |   Update On 2019-06-21 05:04 GMT
சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனின் கேமரா இந்த திறன் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.



சாம்சங் தனது கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன்களை ஆக்ஸடு 7 ஆம் தேதி நியூ யார்க் நகரில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்நிலையில், புதிய ஸ்மார்ட்போனில் புதுவித சவுண்ட் ஆன் டிஸ்ப்ளே எனும் தொழில்நுட்பம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதன் மூலம் நோட் 10 ஸ்மார்ட்போனில் இயர்பீஸ் நீக்கப்படலாம் என கூறப்பட்டது.

தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனின் கேமரா அதிகளவு மாற்றம் செய்யப்படும் என கூறப்படுகிறது. கடந்த ஆண்டு சாம்சங் அறிமுகம் செய்த கேலக்ஸி எஸ்9 சீரிஸ் ஸ்மார்ட்போனில் டூயல் அப்ரேச்சர் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டது.



இந்த தொழில்நுட்பம் f/1.5 – f/2.4 என இருவித அப்ரேச்சர்களை மாற்றிக் கொள்ளும் திறன் கொண்டிருக்கிறது. தற்சமயம் சாம்சங் தனது நோட் ஸ்மார்ட்போனில் f/1.5 – f/1.8 – f/2.4 என மூன்று வேரியபிள் அப்ரேச்சர்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. புதிய தகவலை ஐஸ் யுனிவர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறது.

இதுதவிர கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் ஹோல் பன்ச் டிஸ்ப்ளே வடிவமைப்பை கொண்டிருக்கும் என தெரிகிறது. இம்முறை ஹோல் பன்ச் ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளேவின் மத்தியில் இருக்கும் என கூறப்படுகிறது. சில ரென்டர்களில் புதிய ஸ்மார்ட்போனின் முன்புறம் ஒற்றை செல்ஃபி கேமரா வழங்கப்படலாம் என கூறப்பட்டிருந்தது.

புகைப்படங்களை எடுக்க கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனில் மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. கேலக்ஸி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போனில் கூடுதலாக ToF ரக சென்சார் ஒன்று கூடுதலாக வழங்கப்படும் என தெரிகிறது. சாம்சங் தனது கேலக்ஸி நோட் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை 4ஜி மற்றும் 5ஜி என இரண்டு ஆப்ஷன்களில் வெளியிடும் என கூறப்படுகிறது.



கேலக்ஸி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போனில் 4150 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என தெரிகிறது. இதுதவிர இரு ஸ்மார்ட்போன்களிலும் 7 என்.எம். குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 / எக்சைனோஸ் 9825 சிப்செட் வழங்கப்படலாம்.

மெமரியை பொருத்தவரை கேலக்ஸி நோட் 10 சீரிசில் அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம் மற்றும் 1000 ஜி.பி. மெமரி வழங்கப்படும் என கூறப்படுகிறது. சாம்சங் தனது புதிய நோட் ஸ்மார்ட்போனில் ஹெட்போன் ஜாக் ஆப்ஷனை நீக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
Tags:    

Similar News