தொழில்நுட்பம்

நான்கு கேமரா, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாருடன் இணையத்தில் லீக் ஆன மோட்டோ ஸ்மார்ட்போன்

Published On 2019-06-20 06:45 GMT   |   Update On 2019-06-20 06:45 GMT
நான்கு பிரைமரி கேமரா, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டிருக்கும் மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.



மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனின் கேட் ரென்டர்கள் கடந்த மாதம் இணையத்தில் வெளியாகின. பின் மோட்டோரோலா ஒன் ப்ரோ ஸ்மார்ட்போனின் விளம்பர படங்கள் லீக் ஆகின. 

இதில் மோட்டோரோலாவின் ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனில் சதுரங்க வடிவமைப்பில் நான்கு பிரைமரி கேமரா, வாட்டர் டிராப் நாட்ச், 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துடன் டூயல்-டோன் எல்.இ.டி. ஃபிளாஷ் வழங்கப்படுகிறது. இத்துடன் 1.6μm குவாட் பிக்சல் எனும் வார்த்தை இடம்பெற்றிருக்கிறது.

இதனால் புதிய ஸ்மார்ட்போனில் 48 எம்.பி. கேமரா வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இத்துடன் டூயல் OIS வழங்கப்படுகிறது. இவை தவிர ஸ்மார்ட்போனின் இதர கேமரா விவரங்கள் அறியப்படவில்லை. புகைப்படங்களில் ஸ்மார்ட்போன் பிளாக், பிரவுன் மற்றும் புளு என மூன்று வித நிறங்களில் காட்சியளிக்கிறது. 



முன்னதாக வெளியான விவரங்களில் இந்த ஸ்மார்ட்போன் 6.2 இன்ச் ஸ்கிரீன் கொண்டிருக்கும் என்றும், ஸ்மார்ட்போனின் மேல்புறம் சிம் ஸ்லாட் வழங்கப்படலாம் என கூறப்பட்டது.

இதுதவிர, மோட்டோரோலா நிறுவனம் மோட்டோரோலா ஒன் ஆக்‌ஷன் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் 2520x1080 பிக்சல் டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 9609 சிப்செட், 4 ஜி.பி. ரேம், அதிகபட்சம் 128 ஜி.பி. மெமரி வழங்கப்படுகிறது.

இத்துடன் புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, குவாட் பிக்சல் தொழில்நுட்பம், நைட் விஷன் மோட் வழங்கப்படுகிறது. செல்ஃபி எடுக்க முன்புறம் 12.6 எம்.பி. இன்-ஸ்கிரீன் ரக கேமரா வழங்கப்படுகிறது. இத்துடன் 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

புகைப்படம் நன்றி: cashkaro
Tags:    

Similar News