தொழில்நுட்பம்

இந்தியாவின் நம்பத்தகுந்த ஸ்மார்ட்போன் பிராண்டு - அசுர வளர்ச்சி பெற்ற சீன நிறுவனம்

Published On 2019-06-20 04:57 GMT   |   Update On 2019-06-20 04:57 GMT
இந்தியாவின் நம்பத்தகுந்த ஸ்மார்ட்போன் பிராண்டுகளின் பட்டியலில் சீன ஸ்மார்ட்போன் நிறுவனம் அசுர வளர்ச்சி பெற்றிருக்கிறது.



சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒப்போ இந்தியாவில் நம்பத்தகுந்த ஸ்மார்ட்போன் பிராண்டுகளின் பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்திருக்கிறது.

மும்பையை சேர்ந்த டிரஸ்ட் ரிசர்ச் அட்வைசரி (Trust Research Advisory) எனும் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில், இந்தியாவின் நம்பத்தகுந்த ஸ்மார்ட்போன் பிராண்டுகளில் ஒப்போ மூன்றாவது இடம் பிடித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையின் படி 2019 ஆண்டி பட்டியலில் ஒப்போ நிறுவனம் ஏழு இடங்கள் முன்னேறி இந்த ஆண்டிற்கான டாப் 10 பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


கோப்புப்படம்

தனது ஸ்மார்ட்போன்களில் மோட்டோரைஸ்டு ரக கேமரா, 10 எக்ஸ் வரையிலான ஹைப்ரிட் சூம் வசதி, ஃபாஸ்ட் சார்ஜிங், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் மற்றும் பெசல் லெஸ் டிஸ்ப்ளே உள்ளிட்டவற்றை வழங்கியதே ஒப்போ நிறுவனத்தை முன்னணி இடத்திற்கு கொண்டு வந்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஐதராபாத்தில் மிகப்பெரும் ஆய்வு மற்றும் வளர்ச்சி மையத்தை இயக்கி வரும் ஒப்போ இந்தியாவில் தனது வியாபாரத்தை மேலும் பன்மடங்கு அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. ஐதராபாத் மட்டுமின்றி கிரேட்டர் நொய்டா பகுதியிலும் ஒப்போ உற்பத்தி ஆலை இயங்கி வருகிறது.

முன்னதாக சைபர்மீடியா ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிகக்கையில் அதிகம் விரும்பப்படும் புதுமை மிக்க மொபைல் போன் பிராண்டாக ஒப்போ தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News