தொழில்நுட்பம்

சாம்சங் கேலக்ஸி நோட் 10 அறிமுக தேதி

Published On 2019-06-19 09:44 GMT   |   Update On 2019-06-19 09:44 GMT
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் அறிமுக தேதி பற்றிய விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.



சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனினை ஆகஸ்டு 7 ஆம் தேதி நியூ யார்க் நகரில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய நோட் சீரிஸ் ஸ்மார்ட்போனிற்கான கேலக்ஸி அன்பேக்டு விழா புரூக்லின் நகரில் உள்ள பார்கிளேஸ் மையத்தில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் சாம்சங் தனது கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனினை இதே அரங்கில் அறிமுகம் செய்தது. புதிய கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் பற்றி சாம்சங் இதுவரை எவ்வித தகவலும் வழங்கவில்லை. எனினும், கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் தொடர்ந்து ஆன்லைனில் வெளியாகி வருகிறது.



கேலக்ஸி அன்பேக்டு விழா நடைபெற இன்னும் அதிக நேரம் இருப்பதால், சாம்சங்கின் திட்டத்தில் எப்போது வேண்டுமானாலும் மாற்றங்கள் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. எனினும், கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போனின் வெளியீடு தாமதமாகி இருப்பதால், நோட் 10 ஸ்மார்ட்போன் வெளியீடு முன்னதாக நடைபெறவும் வாய்ப்புகள் இருக்கின்றன.

இந்த ஆண்டு சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் 10 மற்றும் கேலக்ஸி நோட் 10 ப்ரோ என இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. ப்ரோ வேரியண்ட் ஸ்மார்ட்போனில் பல்வேறு கூடுதல் அம்சங்கள் வழங்கப்படலாம் என தெரிகிறது. இவற்றில் பிரெஷர் சென்சிட்டிவ் எட்ஜ்கள் மற்றும் 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படலாம்.
Tags:    

Similar News