தொழில்நுட்பம்

4ஜி.பி. ரேம் கொண்ட ஒப்போ ஏ5எஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

Published On 2019-06-19 06:02 GMT   |   Update On 2019-06-19 06:02 GMT
ஒப்போ நிறுவனம் இந்தியாவில் தனது ஏ5எஸ் ஸ்மார்ட்போனின் 4 ஜி.பி. ரேம் வெர்ஷனை விற்பனை செய்கிறது.



ஒப்போ நிறுவனம் தனது ஏ5எஸ் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் சமீபத்தில் அறிமுகம் செய்தது. முதற்கட்டமாக 2 ஜி.பி. ரேம் 32 ஜி.பி. மெமரி மாடல் ரூ.9,990 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்சமயம் இந்த ஸ்மார்ட்போனின் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விற்பனை செய்யப்படுகிறது.

ஸ்மார்ட்போனில் மெமரி தவிர வேறு எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. அந்த வகையில் ஒப்போ ஏ5எஸ் ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் வாட்டர் டிராப் நாட்ச் ஸ்கிரீன், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு, ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர், 4 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு ஓரியோ மற்றும் கலர் ஓ.எஸ். கொண்டிருக்கும் ஒப்போ ஏ5எஸ் ஸ்மார்ட்போனில் 13 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 8 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் ஒப்போ ஏ5எஸ் ஸ்மார்ட்போனில் பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்லாட் மற்றும் 4230 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கிறது.



ஒப்போ ஏ5எஸ் சிறப்பம்சங்கள்

- 6.22 இன்ச் 1520x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
- ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பி35 12 என்.எம். பிராசஸர்
- IMG பவர் வி.ஆர். GE8320 GPU
- 2 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி 
- 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 8.1 (ஓரியோ) மற்றும் கலர் ஓ.எஸ். 5.2
- 13 எம்.பி. பிரைமரி கேமரா, f/2.2
- 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
- 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
- டூயல் சிம் ஸ்லாட்
- கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
- 4ஜிவோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 4230 எம்.ஏ.ஹெச். பேட்டரி

ஒப்போ ஏ5எஸ் ஸ்மார்ட்போனின் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.12,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட், அமேசான், பே.டி.எம். மால், டாடா க்ளிக் மற்றும் ஸ்னாப்டீல் உள்ளிட்ட தளங்களில் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் இதன் விற்பனை ஆஃப்லைன் மையங்களில் நடைபெறுகிறது.
Tags:    

Similar News