தொழில்நுட்பம்

நுபியாவின் புதிய கேமிங் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

Published On 2019-06-18 04:41 GMT   |   Update On 2019-06-18 04:41 GMT
நுபியா பிராண்டின் புதிய ரெட் மேஜிக் 3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் விற்பனை விவரங்களை பார்ப்போம்.



நுபியா பிராண்டு இந்தியாவில் புதிய கேமிங் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. ரெட் மேஜிக் 3 கேமிங் ஸ்மார்ட்போனில் 6.65 இன்ச் FHD+ HDR AMOLED டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட்போனின் தெர்மல் திறனை மேம்படுத்தும் ஆக்டிவ் கூலிங் சிஸ்டம் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் ஆகும்.

இந்த ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டு இருக்கும் பிரத்யேக ஹார்டுவேர் ஸ்விட்ச்சை ஆன் செய்யும் போது ரெட் மேஜிக் கேம் ஸ்பேஸ் 2.0 எனும் பிரத்யேக டேஷ்போர்டு திறக்கும். இது கேமிங் சார்ந்த அம்சங்களை ஒருங்கிணைத்து, கேம்களை மிக வேகமாக லான்ச் செய்ய உதவுகிறது. இத்துடன் கேமிங் சார்ந்து இருக்கும் பல்வேறு வசதிகளை மிக எளிமையாக இயக்கலாம்.



புதிய கேமிங் ஸ்மார்ட்போனில் டச் சென்சிட்டிவ் ஷோல்டர் வழங்கப்பட்டிருப்பதால், கூடுதலாக கேம்பேட் அக்சஸரி இல்லாமல், கேம்களை விளையாட முடியும். பயனர்கள் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப இந்த பட்டன்களை கஸ்டமைஸ் செய்து கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது. இத்துடன் ஸ்மார்ட்போனின் RGB லைட்டிங்கில் பல்வேறு எஃபெக்ட்களை சேர்த்து அதனையும் கஸ்டமைஸ் செய்யலாம்.

புகைப்படங்களை எடுக்க ரெட் மேஜிக் 3 ஸ்மார்ட்போனில் 48 எம்.பி. சோனி IMX586 சென்சார் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 16 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கொண்டு 8K தரத்தில் வீடியோக்களை படமாக்கலாம். முன்புறம் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டி.டி.எஸ். எக்ஸ் மற்றும் 3டி சவுண்ட் தொழில்நுட்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 27 வாட் க்விக் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.



நுபியா ரெட் மேஜிக் 3 சிறப்பம்சங்கள்

– 6.65 இன்ச் 2340×1080 பிக்சல் FHD+ 19.5:9 AMOLED டிஸ்ப்ளே
– ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 855 7 என்.எம். பிராசஸர்
– அட்ரினோ 640 GPU
– 8 ஜி.பி. LPDDR4x ரேம், 128 ஜி.பி. (UFS 2.1) மெமரி
– 12 ஜி.பி. LPDDR4x ரேம், 256 ஜி.பி. (UFS 2.1) மெமரி
– ஆண்ட்ராய்டு 9.0 (பை) மற்றும் ரெட்மேஜிக் ஒ.எஸ். 2.0
– டூயல் சிம் ஸ்லாட்
– 48 எம்.பி. பிரைமரி கேமரா, 1/2.0″ சோனி IMX586, 0.8μm பிக்சல், f/1.75, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ்
– 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
– கைரேகை சென்சார்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டி.டி.எஸ்.:எக்ஸ்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யு.எஸ்.பி. டைப்-சி
– 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 27 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

நுபியா ரெட் மேஜிக் 3 ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் ஃபிளேம் ரெட் வெர்ஷன் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 35,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் கேமோஃபிளேஜ் வெர்ஷன் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 46,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிய ஸ்மார்ட்போனின் விற்பனை ஜூன் 27 ஆம் தேதி முதல் ப்ளிப்கார்ட் தளத்தில் துவங்குகிறது. நுபியா ரெட் மேஜிக் 3 ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதியும், முழு மொபைல் பாதுகாப்பு வசதியும் வழங்கப்படுகிறது. இத்துடன் கேம் கண்ட்ரோலர், இயர்போன்கள் மற்றும் சார்ஜிங் டாக் உள்ளிட்டவற்றின் விலை முறையே ரூ. 1,999, ரூ. 2,999 மற்றும் ரூ. 2,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News