தொழில்நுட்பம்

ஃபேஸ்புக்கில் அதுபோன்ற கருத்துக்களா? புதிய நடவடிக்கை எடுக்க மார்க் முடிவு

Published On 2019-06-15 08:18 GMT   |   Update On 2019-06-15 08:18 GMT
ஃபேஸ்புக் வலைதளத்தில் அதுபோன்ற கருத்துக்களை இனி அனுமதிக்க மாட்டோம் என அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.



ஃபேஸ்புக் சமூக வலைதளத்தில் அக்கவுண்ட் வைத்திருந்து மரணித்தவர்கள் பற்றி கேலி செய்யும் விதமாக பதிவு செய்யப்படும் போஸ்ட்களை நியூஸ் ஃபீடில் இருந்து நீக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. உயிரிழந்தவர்கள் பற்றி எழுதப்படும் தரக்குறைவான கருத்துக்களை நீக்கும் வகையில் ஃபேஸ்புக் தனது தள அமைப்பில் மாற்றங்களை செய்து இருக்கிறது.

மரணத்தை பாராட்டும் அல்லது ஊக்குவிக்கும் வகையிலான கருத்துக்கள் இனி ஃபேஸ்புக்கில் இடம்பெறாது. முன்னதாக இதுபோன்ற கருத்துக்கள் ஃபேஸ்புக் விதிகளை எதிரானதாக கருதப்படவில்லை. தற்சமயம் மேற்கொள்ளப்பட்டிருக்கும் மாற்றங்களில் இவ்வாறான பதிவுகள் முகநூல் விதிகளை மீறுவதாக அர்த்தமாகும்.

அந்த வகையில் உயிரிழந்தவர்கள் பற்றி ஃபேஸ்புக்கில் பதிவு செய்யப்படும் தரக்குறைவான கருத்துக்களை சம்மந்தப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர் ஃபேஸ்புக்கிடம் தெரிவிக்கலாம் என ஃபேஸ்புக் தரவுகளுக்கான மேலாளர் லாரா ஹெர்ணான்டஸ் தெரிவத்தார். முன்னதாக கேலி செய்யும் வகையில் இருக்கும் பதிவுகளை சம்மந்தப்பட்டவர்களே தெரிவிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது.



உயிரிழந்தவர்கள் பயன்படுத்திய அக்கவுண்ட்களில் மரணித்தவர்களே குற்றச்சாட்டு எழுப்ப முடியாது என்பதால், தற்சமயம் குடும்ப உறுப்பினர்கள் உயிரிழந்தவர்கள் சார்பாக தரக்குறைவான பதிவுகளை ஃபேஸ்புக்கிடம் கொண்டு செல்லலாம். இதே முறையை பிரபலங்களுக்கும் ஃபேஸ்புக் பின்பற்ற இருக்கிறது.

ஒருவேளை மரணித்தவர்கள் தங்களது அக்கவுண்ட்டில் பப்ளிக் கமென்டிங் செய்ய அனுமதித்து இருந்தால், ப்ரோஃபைலில் அதிகப்படியான ஸ்பேம் மற்றும் கேலி செய்யும் கருத்துக்கள் பதிவு செய்யப்படும். இவ்வாறு நடக்கும் பட்சத்தில் இது சம்மந்தப்பட்டவரின் குடும்பத்தாருக்கு வருத்தத்தை ஏற்படுத்தும்.

ஃபேஸ்புக் அக்கவுண்ட் வைத்திருப்போர் உயிரிழக்கும் பட்சத்தில் அவர்களது அக்கவுண்ட்களை மெமோரலைஸ்டு பட்டியிலில் சேர்க்கும் வசதியை ஃபேஸ்புக் வழங்குகிறது. ஃபேஸ்புக்கில் மெமோரலைஸ்டு அக்கவுண்ட்களுக்கு பயனர்கள் அஞ்சலி செலுத்தும் வசதியும் வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News