தொழில்நுட்பம்

இன்ஃபினிட்டி வி டிஸ்ப்ளே கொண்ட கேலக்ஸி ஏ10இ ஸ்மார்ட்போன் அறிமுகம்

Published On 2019-06-14 06:42 GMT   |   Update On 2019-06-14 06:42 GMT
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ10இ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் இன்ஃபினிட்டி வி டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.



சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ10இ ஸ்மார்ட்போன் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கேலக்ஸி ஏ20 மற்றும் கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன. புதிய கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன் கேலக்ஸி ஏ10 மாடலின் லைட் எடிஷன் வேரியண்ட் ஆகும்.

புதிய கேலக்ஸி ஏ10இ ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களாக இன்ஃபினிட்டி வி டிஸ்ப்ளே, 8 எம்.பி. பிரைமரி கேமரா இருக்கின்றன.  அமெரிக்காவில் ஏற்கனவே கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்படும் நிலையில், கேலக்ஸி ஏ10 மற்றும் கேலக்ஸி ஏ20 ஸ்மார்ட்போன்கள் வரும் வாரங்களில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ10இ சிறப்பம்சங்களை இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும், இதில் 5.83 இன்ச் இன்ஃபினிட்டி வி டிஸ்ப்ளே, 8 எம்.பி. பிரைமரி கேமரா, 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படும் என தெரிகிறது.



கேலக்ஸி ஏ10 ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 720x1520 பிக்சல் இன்ஃபினிட்டி வி டிஸ்ப்ளே பேனல் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.9 லென்ஸ் மற்றும் 3400 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. 

முன்னதாக வெளியான தகவல்களில் சாம்சங் கேலக்ஸி ஏ10இ ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 9 பை மற்றும் சாம்சங்கின் ஒன் யு.ஐ., எக்சைனோஸ் 7884 பிராசஸர், 2 ஜி.பி. ரேம் வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

புதிய கேலக்ஸி ஏ10இ ஸ்மார்ட்போனின் விலை 179.99 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.12,500) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News