தொழில்நுட்பம்

பட்ஜெட் விலையில் எல்.ஜி. ஸ்மார்ட்போன் அறிமுகம்

Published On 2019-06-13 06:15 GMT   |   Update On 2019-06-13 06:15 GMT
எல்.ஜி. நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய X சீரிஸ் எல்.ஜி. ஸ்மார்ட்போனில் மூன்று பிரைமரி கேமரா யூனிட் வழங்கப்பட்டுள்ளது.



எல்.ஜி. நிறுவனம் தனது X6 ஸ்மார்ட்போனினை கொரியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அந்நிறுவனம் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் கியூ60 என்ற பெயரில் அறிமுகம் செய்த மாடல் ஆகும்.

எல்.ஜி. X6 ஸ்மார்ட்போனில் 6.26 இன்ச் 19:9 ஹெச்.டி. பிளஸ் ஃபுல் விஷன் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 16 எம்.பி. பிரைமரி கேமரா, PDAF, 5 எம்.பி. 120 டிகிரி சூப்பர் வைடு ஆங்கிள் கேமரா, 2 எம்.பி. டெப்த் கேமரா மற்றும் 13 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

புதிய ஸ்மார்ட்போன் MIL-STD-810G தரச் சான்று பெற்றிருக்கிறது. இதனால் இந்த ஸ்மார்ட்போன் வைப்ரேஷன், அதிக வெப்பநிலை, குறைந்த வெப்பநிலை, தெர்மல் ஷாக் என பல்வேறு சூழ்நிலைகளில் சீராக இயங்கும். எல்.ஜி. X6 ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

இத்துடன் பிரத்யேக கூகுள் அசிஸ்டண்ட் பட்டன் வழங்கப்பட்டுள்ளது. இதில் ஹை-ஃபை குவாட் டி.ஏ.சி. மற்றும் டி.டி.எஸ். எக்ஸ் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இது இயர்போன்கள் இல்லாமலேயே ஆடியோவினை 7.1 சேனல் சிஸ்டத்தில் வெளிப்படுத்தும்.



எல்.ஜி. X6 சிறப்பம்சங்கள்:

- 6.26 இன்ச் 1520x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 19:9 ஃபுல் விஷன் டிஸ்ப்ளே
- 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P22 12 என்.எம். பிராசஸர்
- 650 மெகாஹெர்ட்ஸ் IMG பவர் வி.ஆர். GE8320 GPU
- 3 ஜி.பி. ரேம்
- 64 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம் ஸ்லாட்
- 16 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், PDAF
- 2 எம்.பி. டெப்த் சென்சார்
- 5 எம்.பி. சூப்பர் வைடு ஆங்கிள் லென்ஸ்
- 13 எம்.பி. செல்ஃபி கேமரா
- கைரேகை சென்சார்
- MIL-STD 810G தரச்சான்று
- கூகுள் அசிஸ்டண்ட் பட்டன்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி

எல்.ஜி. X6 ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் புளு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 295 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.20,510) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News