தொழில்நுட்பம்
மோட்டோரோலா ஒன் விஷன் இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு
மோட்டோரோலா நிறுவனத்தின் ஒன் விஷன் ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டோரோலா நிறுவனம் இன்-ஸ்கிகீரன் கேமரா கொண்ட புதிய ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடு ஜூன் 20-இல் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மோட்டோரோலாவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இடம்பெற்றிருக்கும் புதிய டீசரில் ஜூன் 20 ஆம் தேதி இந்தியாவில் புதிய பிரீமியம் சாதனம் அறிமுகமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மோட்டோரோலா நிறுவனம் கடந்த மாதம் பிரேசில் நாட்டில் தனது ஒன் விஷன் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது.
புதிய டீசரின் படி மோட்டோரோலா தனது ஒன் விஷன் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 21:9 சினிமா விஷன் எல்.சி.டி. ஸ்கிரீன் வழங்கப்படுகிறது.
Let’s move a notch ahead with a wider perspective! Get ready to experience #ANewVision. Tag your binge-watch partner who needs to see this now! pic.twitter.com/FhhlLWFGQe
— Motorola India (@motorolaindia) June 10, 2019
முன்புறம் 25 எம்.பி. இன்-ஸ்கிரீன் கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த கேமராவில் 1.8µm குவாட் பிக்சல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இது குறைந்த வெளிச்சமுள்ள பகுதிகளிலும் செல்ஃபிக்களை மிக துல்லியமாக வழங்கும் என கூறப்படுகிறது. புதிய மோட்டோ ஸ்மார்ட்போனில் எக்சைனோஸ் 9609 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.
மோட்டோரோலா ஒன் விஷன் சிறப்பம்சங்கள்:
- 6.3 இன்ச் 1080x2520 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. ஸ்கிரீன்
- 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் எக்சைனோஸ் 9609 பிராசஸர்
- 4 ஜி.பி ரேம்
- 128 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஹைப்ரிட் டூயல் சிம்
- ஆண்ட்ராய்டு 9.0 (பை)
- 48 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.7, OIS
- 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.2
- 25 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
- கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- யு.எஸ்.பி. டைப்-சி
- 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 15 வாட் டர்போ பவர் ஃபாஸ்ட் சார்ஜிங்
மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போன் சஃபையர் புளு மற்றும் பிரவுன் நிறங்களில் கிடைக்கிறது. பிரேசில் நாட்டில் இதன் விலை 299 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.23,520) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.